வெளியானது 19 மாவட்ட தவெக பொறுப்பாளர்கள் லிஸ்ட்! விஜய் நடத்திய மீட்டிங்கிற்கு பிறகு அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இப்போது படிப்படியாகக் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 95 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் இன்று 19 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட்டுள்ளார். பனையூர் கட்சி அலுவலகத்தில் விஜய் நேரடியாக ஆலோசனை நடத்திய நிலையில், மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

தனது கடைசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய், ஒரு பக்கம் தனது கட்சியிலும் தேவையான நியமனங்களை மேற்கொண்டு வருகிறார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதலில் மாநாட்டை நடத்திய விஜய், தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். இப்போது தவெகவில் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் நடந்து வருகிறது.

Vijay TVK politics

தவெக

மாநிலத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள சூழலில், ஒரு தொகுதிக்கு இரு மாவட்டச் செயலாளர்கள் விதம் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். மாவட்ட தலைவர், மாவட்டச் செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர் என பெரும்பாலும் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து நலத்திட்டங்களைச் செய்தவர்களுக்கே பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகள் தரத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், விஜய் கட்சியில் மகளிர் அணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி என மொத்தம் 28 அணிகளை உருவாக்கியுள்ளனர். அந்த அணிகளுக்கான தலைவர், செயலாளர், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளும் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

மாவட்டச் செயலாளர்கள்

மாவட்ட செயலாளர்கள் நியமனத்தைப் பொறுத்தவரை இதுவரை 5 கட்டங்களாக 95 மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்த நியமன அறிவிப்பை விஜய் வெளியிட்டார். இதற்கிடையே இன்று மீதமுள்ள மாவட்டங்களுக்கும் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. இதற்காக ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் விஜய் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

அதாவது ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள மாவட்டங்களின் நிர்வாகிகளை நேரில் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் இன்று பனையூர் கட்சி அலுவலகத்தில் விஜய் நேரடியாக ஆலோசனை நடத்தி உள்ளார் இதில் பொதுச் செயலாளர் ஆனந்த்தும் பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு பிறகே மாவட்டச் செயலாளர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தில் ஆறாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கட்சி விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விஜய்

விஜயை பொறுத்தவரை அவர் இப்போது ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடத்து வந்தாலும் கூட கட்சி பணிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தியே வருகிறார். சினிமா பரபரப்புக்கு நடுவிலும் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் அவருடன் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றிருந்தார். அது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் இப்போது பீகாரில் தனியாக ஒரு கட்சி நடத்தி வருகிறார். நேர்காணல் ஒன்றில் பிரசாந்த் கிஷோர், விஜய் கட்சியைத் தனது கட்சியுடன் ஒப்பீட்டு பேசினார். அதாவது இரு கட்சிகளையும் மக்கள் ஏற்றுக் கொண்டால் ஆட்சியைப் பிடிக்க முடியும்.. இல்லையென்றால் படுதோல்வியாக இருக்கும். இடையில் சுமாரான வெற்றி என்ற ஒன்று நிச்சயம் இருக்காது என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+