விஜய் தலைமையில் நாளை நடைபெறும் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. மேஜர் விஷயம் குறித்து ஆலோசனை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பனையூர் அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை நடத்தி வருகிறார்.இவர் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் சூழலில் மறுபுறம் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது கட்சி கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார்.

Vijay TVK politics

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் தவெகவின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் விஜய் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழகத்தை ஆளும் திமுகவை நேரடியாக விமர்சித்தார். குறிப்பாக அந்தக் கூட்டத்தில் முதல்முறையாகப் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்தார். 2026 சட்டசபைத் தேர்தல் மக்கள் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்கும் என்றும் அதில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே மட்டுமே போட்டி இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அந்த முதலாவது பொதுக்குழு கூட்டத்திலேயே பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் பூத் கமிட்டி மாநாடு தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பூத் கமிட்டிக்கு சரியான ஆட்களை நியமிப்பது ரொம்பவே முக்கியம். தற்போதைய சூழலில் திமுக, அதிமுகவால் மட்டும் மாநிலம் முழுக்க பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் அளவுக்குக் கட்டமைப்பைக் கொண்டு இருக்கிறது.

இதன் காரணமாகவே பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் என்பது முக்கியமானதாக இருக்கிறது. இதற்கிடையே பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாகவும் பூத் கமிட்டி மாநாடு தொடர்பாகவும் ஆலோசிக்க நாளைய தினம் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விஜய்யும் பங்கேற்கவுள்ளார்.

நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் இந்க் கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாவட்டச் செயலாளர்கள் & முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+