Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்க விஜய் நான் வர்றேன்.. தனித்தே களமிறங்கும் தவெக! எந்த தொகுதியில் யார் யார் போட்டி? லீக்கான தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் தேர்தலை முன்னிட்டு சூடுபிடித்து வரும் நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. நீண்டநாளாக எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடப் போவதாக விஜய் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதும் உறுதியாகியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுடன் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இதனால் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 tvk vijay

திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான அணியும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் முழு வேகத்தில் ஈடுபட்டுள்ளன. அதேபோல் நாம் தமிழர் சீமான் ஏற்கனவே தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் வெளியிட்டு விட்டார்.

தமிழக வெற்றி கழகம்

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் நீண்ட நாளாக ஆர்வம் நிலவியது. கட்சி தொடங்கிய நாளிலிருந்தே விஜய்யை தங்களது கூட்டணியில் சேர்க்க பல தரப்பினரும் முயற்சி செய்தனர். குறிப்பாக பாஜக, அதிமுக உள்ளிட்ட அணிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற யூகங்கள் தொடர்ந்து வெளியானது. சில கட்டங்களில் காங்கிரஸ் உடன் இணையும் வாய்ப்பும் பேசப்பட்டது.

பாஜக கூட்டணி

மேலும், விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தாமதமானது மற்றும் கரூர் நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை போன்ற விவகாரங்கள் மூலம் அவருக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக அவர் டெல்லி செல்லும் போது பாஜக தலைவர்களை சந்திக்கலாம் என்ற தகவலும் பரவியது. ஆனால் இத்தகைய அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது அவர் எடுத்துள்ள முடிவு கவனம் ஈர்த்துள்ளது.

தவெக தனித்துப் போட்டி

சென்னை பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது, "நாம் இந்த தேர்தலில் தனித்தே போட்டியிடப் போகிறோம். அனைவரும் தங்களது தொகுதிகளில் களப்பணியை தீவிரப்படுத்துங்கள். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மாநிலம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்று விஜய் உறுதியுடன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்குப் பிறகு கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

விஜய் பெரம்பூர் தொகுதி

இதனையடுத்து கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் முழு வேகத்தில் இறங்கியுள்ளனர். முக்கியமாக சென்னை நகரில் பல தொகுதிகளில் கட்சியின் முன்னணி முகங்கள் களமிறங்கும் சூழல் உருவாகியுள்ளது. அதன்படி, பெரம்பூர் தொகுதியில் விஜய் தானே போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜூனா, தி.நகர் தொகுதியில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்டோர் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

2026 சட்டசபை தேர்தல்

மேலும் பல மாவட்டச் செயலாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் இந்த முறை நான்கு முனைப்போட்டி உறுதியாகியுள்ளது. பாரம்பரியமாக ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கும், புதிய அரசியல் சக்திகளுக்கும் இடையிலான போட்டி கடுமையாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர். குறிப்பாக வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கக்கூடும் என்பதால் ஒவ்வொரு தொகுதியும் கடும் போட்டியை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. 1967-ஆம் ஆண்டின் அரசியல் மாற்றத்தைப் போலவே 2026 தேர்தலும் ஒரு புதிய வரலாற்றை உருவாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+