Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிகளில் மற்ற கட்சி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார்.. கடந்த காலங்களில் இந்த தொகுதிகளில் வென்றவர்கள் யார்.. பெற்ற வாக்குகள் எவ்வளவு என்பது தொடர்பாக நாம் விரிவாக பார்க்காலம்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத சூழலில் இப்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகள் அனைத்துமே கூட்டணியை உறுதி செய்து, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பை முடித்து பிரச்சாரத்தில் இறங்கிவிட்டன. இந்த தேர்தலில் முதல்முறையாக களமிறங்கும் விஜய்யும் இன்று வேட்பாளர்களை அறிவித்தார்.

vijay

விஜய்

விஜய் இந்த தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அனைவரும் எதிர்பார்த்தபடியே சென்னையில் பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுகிறார். அதேபோல திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட போவதாக விஜய் அறிவித்துள்ளார். இந்த இரண்டுமே கிறிஸ்தவர்கள் கணிசமாக உள்ள தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதிகளில் களமிறங்கும் பிற கட்சி வேட்பாளர்கள் குறித்து நாம் பார்க்கலாம்!

பெரம்பூர்

இதில் பெரம்பூர் தொகுதியில் திமுக நேரடியாக களமிறங்குகிறது.. திமுக சார்பில் அங்கு சிட்டிங் எம்எல்ஏ ஆர்டி சேகர் போட்டியிடுகிறார். அதிமுகவின் என்டிஏ கூட்டணியில் பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், அதில் பெரம்பூர் தொகுதிக்கான வேட்பாளர் பெயர் இல்லை. எனவே, 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் அங்கு பாமக சார்பில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது தெரிய வரும்.

நாம் தமிழர் கட்சி இந்த முறையும் வழக்கம் போல தனியாகவே போட்டியிடுகிறது. இதன் காரணமாகவே மற்ற கட்சிகளுக்கு முன்பே, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை ஆரம்பித்து இருந்தது. அதன்படி நாம் தமிழர் கட்சி சார்பில் பெரம்பலூர் தொகுதியில் வெற்றித்தமிழன் என்பவர் போட்டியிடுகிறார்.

2021 தேர்தல்

பெரம்பூர் தொகுதியில் கடந்த 7 தேர்தல்களில் சிபிஎம் 3 முறையும், திமுக 3 முறையும் வென்றுள்ளது. 2016 தேர்தலில் மட்டுமே இந்த தொகுதியில் அதிமுக வென்றுள்ளது. கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்டி சேகர் 1.05 லட்சம் வாக்குகளை பெற்றார். அவருக்கு எதிராக போட்டியிட்ட தனபாலன் 50 ஆயிரம் வாக்குகளை பெற்றார். இதன் மூலம் திமுக 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. நாதக மற்றம் மநீம முறையே 19,000 மற்றும் 17,000 வாக்குகளை பெற்றது.

திருச்சி கிழக்கு

அடுத்து திருச்சி கிழக்கு இந்த தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் திமுக vs அதிமுக நேரடியாக களமிறங்குகிறது. அதேபோல அதிமுக சார்பில் ராஜசேகரன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி என்பவர் போட்டியிடுகிறார்.

திருச்சி கிழக்கு தொகுதி 2011ல் தொகுதி மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்டது. 2011 மற்றும் 2016 தேர்தல்களில் அங்கு அதிமுக வென்ற சூழலில், 2021ல் அங்கு திமுக வென்றது. 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 94 ஆயிரம் வாக்குகளை பெற்ற சூழலில், அதிமுக வேட்பாளர் வெள்ளமண்டி நடராஜன் 40 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றார். இதன் மூலம் 53 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றார். நாதக, மற்றும் மநீம வேட்பாளர்கள் முறையே 14 ஆயிரம் மற்றும் 11 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+