வெயிட்டிங் ஓவர்.. மாணவர்களுக்கு சூப்பர் செய்தி! 3வது கட்டமாக மாணவர்களை சந்திக்கும் விஜய்! எப்போது?
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து கடந்த 30-ம் தேதியும், 4ஆம் தேதியும் பாராட்டினார். இந்த நிலையில் செங்கல்பட்டு, கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை நாளை (13ஆம் தேதி) சந்தித்து பாராட்ட உள்ளதாக தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே அதாவது 2023 ஆம் ஆண்டில் இருந்தே விஜய் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக மூன்று பேரை தேர்ந்தெடுத்து சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு பரிசு அளிப்பது வழக்கம்.
மேலும் நாள் முழுவதும் நின்று கொண்டே அவர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் பேசு பொருளானது.

தற்போது விஜய் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் இந்தாண்டும் விஜய் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இருக்கும் எனவே தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூறி வந்தனர். இதற்கிடையே தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பிளஸ் டூ தேர்வு கடந்த 8ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டு 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில், இந்தாண்டு விஜய் - மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி எப்போது இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மாவட்ட செயலாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகளின்படி சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பட்டியலை தயார் செய்தனர். தொடர்ந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை சேகரித்து தலைமைக்கு அனுப்பினர்.
இதனையடுத்து கடந்த 30ஆம் தேதி, அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களையும், 2வது கட்ட விழா 4ஆம் தேதி அன்று நடைபெற்ற நிலையில், ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை, விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளை சந்தித்து பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்த நிலையில் மூன்றாவது கட்டமாக விஜய் மாணவர்களை சந்திக்கும் தேதியும் மாவட்டங்களின் விபரமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நாளை (13ஆம் தேதி) மாமல்லபுரம் 4.5 ஷர்ட்டனில் செங்கல்பட்டு, கோவை, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, தென்காசி, புதுச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளை விஜய் சந்தித்து பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கி கௌரவிக்க உள்ளார் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே விஜயின் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம், விஜய் மாணவர் சந்திப்பை குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் கடும் எதிர்வினை ஆற்றி வரும் நிலையில் நாளை விஜய் அதற்கு பதில் அளித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
கரூரில் 'ஜனநாயகன்' ஷூட்டிங்?.. சிபிஐ அடுத்த ஆக்சன் என்ன? மாரிதாஸ் வைத்த பாயிண்ட்.. கவனிச்சீங்களா? -
சிபிஐயிடம் வசமாக சிக்கிய விஜய்? பிரசார வாகனம் 20 மீட்டர் தள்ளிப்போனது ஏன்? கரூர் நெரிசலில் ட்விஸ்ட் -
வசமாக சிக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவின் ஸ்கெட்ச்! தவெகவுக்கு இப்படியா நடக்கனும்! -
காலம் கடந்துவிட்டது விஜய்! இந்த சமாளிப்புகள் இனி உதவாது! இப்தாருக்கு காத்திருந்தது ஏன்? -
ஆதவ் அர்ஜுனாவுக்கு அடுத்த சிக்கல்.. மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரும் முக்கிய வழக்கு! -
90 சீட் பேரம்? ஆதவ் அர்ஜுனா அப்படி சொன்னாரே.. இல்லவே இல்லை என திட்டவட்டமாக மறுத்த விஜய்! -
சென்னை களம்! திமுகவுக்குச் சாதகமாக மாறும் விஜய்யின் வியூகம்? கமல் அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கலாமே -
அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்! -
திருப்பரங்குன்றத்திற்கு பேசாதது ஏன்? விஜய்க்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய தமிமுன் அன்சாரி! -
நடத்தை விதி வந்தால்.. வெளியே வருவாருன்னு சொன்னீங்களே.. வீட்டுக்குள் விஜய்... விழிபிதுங்கும் தம்பிகள் -
100ஆ ஹலோ கண்ட்ரோல் ரூமா? விஜய்யின் தவெகவை பாருங்க சார்.. நள்ளிரவில் தனலட்சுமியால் அலறிய கோவை போலீஸ்












Click it and Unblock the Notifications