தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.. பக்கா பிளானோடு வரும் விஜய்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது. திருவான்மியூரில் உள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் இந்த குழு கூட்டம் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில் சற்று நேரத்திற்கு முன்பு பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கூடியது.. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.
இந்த கூட்டத்திற்காக கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் விழா நடக்கும் இடத்திற்கு வர வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காலை 7.30 மணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து 2,150 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

மொத்தமாக 15 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி பெண்கள் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு, இந்தி திணிப்பு, நாடாளுமன்ற எம்பிக்கள் எண்ணிக்கை குறைப்பு, டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக இன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாம்.
தமிழக அரசின் தலைமைச் செயலக செட்டோடு பிரம்மாண்டமாக இதற்காக நுழைவு வாயில் தயார் செய்யப்பட்டு உள்ளது. கட்சி அடிப்படை அமைப்பு, பூத் கமிட்டி அமைப்பது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது, தலைவருக்கு முக்கியமான சில அதிகாரங்களை வழங்குவது, கட்சி விதியில் சில திருத்தங்களை, புதுமைகளை செய்வது உள்ளிட்ட பல விஷயங்கள் இன்றைய கூட்டத்தில் செய்ய உள்ளனர்.
முக்கிய முடிவுகள்
சமீபத்தில் விஜயின் கட்சியில் ஆதவ் அர்ஜுனா இணைந்தார். த.வெ.க.வின் தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை முன்னெடுக்கிறது ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம். இதற்கான ஒப்பந்தத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனத் தலைவர் ஆதவ் அர்ஜுனாவுக்குமிடையே அக்ரிமெண்ட் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே, த.வெ.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் இந்த அக்ரிமெண்ட்டில் சைன் பண்ணியிருக்கிறார் விஜய்.
ஆனால் இவரை தவிர பிரபல முகங்கள் யாரும் கட்சியில் இணையவில்லை. முக்கியமாக இக்கட்சியில் புதிதாக நிர்வாகிகள் யாரும் இணையவில்லை. கமல் கட்சி தொடங்கிய போது மநீமவில் கொத்து கொத்தாக நிர்வாகிகள் பலர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இணைந்தார். ஆனால் தவெகவில் அப்படி இல்லை. முதல் கட்டமாக தமிழக வெற்றி கழகத்தில் உட்கட்சி பூசல் உள்ளது. மேலே இல்லை என்றாலும் மாவட்ட அளவில் உள்ளூர் அளவில் மோதல் உள்ளது.
உள்ளூர் அளவில் இப்போதுதான் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதை அங்கே இருக்கும்.. பதவி எதிர்பார்த்து காத்திருந்த மற்ற நிர்வாகிகள் ஏற்கவில்லை . இதனால் கொடி ஏற்றுவது தொடங்கி போஸ்டர் அடிப்பது வரை பல மோதல்கள் நடக்கின்றன. ஒரே மாவட்டத்தில் பல விஜய் ரசிகர் குழுக்கள் இருக்கும். மன்றங்கள் ஒன்று என்றாலும் குழுக்களாக இவர்கள் பிரிந்து இருப்பார்கள். இதன் காரணமாகவே இவர்களுக்கு இடையே பதவி பெறுவதில் பூசல் நிலவி வருகிறதாம்.
இதை எல்லாம் இன்று பேசி தீர்க்க உள்ளனர். முக்கியமாக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications