"மிஷன் 2026.." தமிழ்நாடு தேர்தலுக்காக விஜய் போடும் பிரம்மாண்ட பிளான்.. நாளை 2 முக்கிய அறிவிப்புகள்?
சென்னை: நாளைய தினம் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. விஜய் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே 2026 தேர்தலை மனதில் வைத்து விஜய் இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் கடந்தாண்டு அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து கடந்தாண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தையும் விஜய் நடத்தினார். ஹெச் வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடித்து வரும் விஜய், மற்றொருபுறம் அரசியலிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய்
முக்கிய பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்க எந்தவொரு இடத்திலும் தவறுவதில்லை. மேலும், இடையில் ஆளுநர் ஆர்.என். ரவியையும் சந்தித்துப் பேசியிருந்தார். தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு கட்சியின் இரண்டாவது ஆண்டு விழாவிலும் அதிரடியாகப் பேசி தனது கட்சியின் இலக்கை தெளிவுபடுத்தினார். அந்தக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
விஜய்யைப் பொறுத்தவரை 2026 தேர்தல் தான் இலக்கு என்பதில் தெளிவாக இருக்கிறார். கடந்த 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே கட்சியைப் பதிவு செய்தாலும் 2026 தேர்தலில் தான் போட்டி என்பதில் உறுதியாக இருந்தார். இதற்கிடையே நாளைய தினம் தவெக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் நிலையில், அதில் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுக்குழுக் கூட்டம்
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆண்டுக்கு ஒருமுறையாவது பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது விதியாகும். அதன்படி நாளைய தினம் தவெக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் சுமார் 2100 பேர் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம் காலை 10 மணி முதல் பிற்பகல் வரை நடைபெற உள்ளது. காலை 7 மணி முதலே மண்டபத்தில் கட்சியினர் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு தபால் மட்டுமின்றி மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட சுற்றுப்பயணம்
இந்தக் கூட்டத்தில் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் 2026 தேர்தலுக்கு முன்னதாக விஜய் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். ஒட்டுமொத்த மாநிலத்தையும் கவர் செய்யும் வகையில் இந்த பிரம்மாண்ட நடைப்பயணத்தை தவெக திட்டமிட்டு வருகிறது. 2026 தேர்தல் களத்தைத் தீர்மானிப்பதாக இந்த நடைப்பயணம் இருக்கும் என தவெகவினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். நாளைய பொதுக்குழுக் கூட்டத்தில் நடைப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
பூத் கமிட்டி மாநாடு
அதேபோல தமிழகத்தைப் பொறுத்தவரை பூத் கமிட்டி ரொம்பவே முக்கியம். இங்குப் பிரதான கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளுக்கு பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிப்பதிலேயே சிக்கல் இருக்கிறது. இந்த பிரச்சினையை உணர்ந்தே தொடக்கம் முதலே தவெகவில் பூத் கமிட்டிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. இதற்கிடையே பூத் கமிட்டி மாநாடு தொடர்பாகவும் நாளை முக்கிய அறிவிப்பு வரலாம் எனச் சொல்லப்படுகிறது.
-
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
எங்கே போனார்கள் சிங்கப்பெண்கள்? ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தில் பேரதிர்ச்சி -
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
தமிழ்நாட்டின் கஜானா காலியா? நிதி நிலை என்ன? இன்று மாலை வெளியாகிறது வெள்ளை அறிக்கை -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா












Click it and Unblock the Notifications