கைவசம் 113 எம்எல்ஏக்கள் ஆதரவு.. பெரும்பான்மையை நிரூபிக்க 10 நாள் ஆளுநரிடம் அவகாசம் கேட்ட விஜய்!
சென்னை: இன்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் விஜய்! நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள சூழலில், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில், ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், திங்கள்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. திமுக 59 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக இருக்கும் சூழலில், அதிமுக 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

இதற்கிடையே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய், இப்போது ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். இன்னும் ஆட்சி அமைக்க 10 பேரின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. இதற்காகக் காங்கிரஸ், பாமக, இடதுசாரிகளிடம் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் வசம் 5 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், இன்னும் கூடுதலாக 5 பேர் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பிற்பகல் 2 மணியளவில் அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
அவர் நாளை முதல்வராகப் பதவி ஏற்கலாம் எனச் சொல்லப்படும் நிலையில், இன்று ஆட்சி அமைத்து உரிமை கோருகிறார். சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு வழங்கப்படப்போகும் அந்த 15 நாட்கள் தான் விஜய்யின் அரசியல் வாழ்வின் மிகச்சிறந்த 'அக்னிப் பரீட்சையாக' இருக்கப்போகிறது.
இருப்பினும், கர்நாடகாவில் எடியூரப்பா இதுபோல மைனாரிட்டி ஆட்சியை அமைத்தபோது அவருக்குப் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு நாள் மட்டுமே சுப்ரீம் கோர்ட் வழங்கிய நிலையில், விஜய்க்கும் ஒரு நாள் மட்டுமே கூட வழங்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது. விஜய் ஆட்சியை அமைத்தாலும் கூட 100க்கும் மேற்பட்ட இடங்களைக் கொண்டுள்ள பலமான எதிர்க்கட்சி வரிசையைச் சமாளிப்பது விஜய்க்கு ஒரு சவாலான காரியம் தான்!












Click it and Unblock the Notifications