டிகே சிவக்குமாருக்கு செக் வைக்கும் விஜய்! நாளை மறுநாள் டெல்லி பயணம்! மோடியை நேரில் சந்திக்க திட்டம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் விஜய் நாளை மறுநாள் திங்கட்கிழமை டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் தொடர்ந்து அடாவடியாக பேசி வரும் சூழலில், மோடியை விஜய் நேரில் சந்தித்து பேச இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் அடாவடியாக பேசி வருகிறார். மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறி வரும் டிகே சிவக்குமார், நேற்று கர்நாடகா சென்ற மோடியிடம் நேரடியாகவே கோரிக்கை விடுத்தார்.

Vijay to meet PM Modi in person to travel to Delhi on the 16th-plans to discuss the Mekedatu issue

இது தமிழ்நாட்டு மக்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று டிகே சிவக்குமார் வலியுறுத்திய நிலையில், அனுமதி கொடுக்கக் கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், தமிழக முதல்வர் விஜய் வரும் 16 ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திங்கள் கிழமை டெல்லி செல்லும் முதல்வர் விஜய், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்றும் மோடியிடம் விஜய் வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது. டெல்லி செல்லும் விஜய் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+