118 நிஜமாகுது.. இன்னும் சற்று நேரத்தில் திருமாவளவனை சந்திக்கிறார் விஜய்! சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை தவெக தலைவர் விஜய் சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பின் மூலம் விஜய் எதிர்பார்த்த 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
விஜய் முதலமைச்சராக 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. நேற்று இடதுசாரிகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்திருந்ததன் மூலம், விஜய்க்கு 116 எம்எல்ஏக்களின் சப்போர்ட் கிடைத்திருந்தது. இந்நிலையில் விசிகவின் நிலைப்பாடு என்ன என்பதுதான் கேள்வியாக இருந்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நேற்று zoom ஆன்லைன் மீட்டிங் வழியாக நிர்வாகிகளிடம் பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் நேற்றிரவு வரை அவர் எந்த பதிலையும் சொல்லவில்லை. அதேநேரம் விசிக நிர்வாகிகள் பலரும் தங்கள் சோஷியல் மீடீயா பக்கத்தில் 'ஆட்சியில் அதிகாரம்' என்றும், 'இது திருமா காலம்' என்றும் பதிவிட்டிருந்தனர்.
அப்படியெனில், காங்கிரஸ் எதிர்பார்த்ததை போல, அமைச்சர் பதவியை திருமாவளவன் எதிர்பார்க்கிறார் என்று பேச்சுக்கள் அடிபட்டன. இதனை திருமா மறுத்தோ, ஏற்றோ இதுவரை பேசவில்லை. ஆன்லைன் மீட்டிங் நேற்றே முடிந்திருந்தாலும், விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்து திருமாவளவன் வாய் திறக்கவில்லை.
இந்த நிலையில்தான் விஜய், இன்று திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதரவு கோருகிறார். இந்த சந்திப்பில், விஜய் உடனான கூட்டணியில் விசிகவுக்கு என்ன பலன் என்பது குறித்து பேசப்படக் கூடும். எனவே இந்த சந்திப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சற்று முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விசிகவின் வன்னி அரசு, எம்மை ஓரங்கட்ட நினைத்தாலும், ஒதுக்க நினைத்தாலும், நாங்களே மையம் என்று கூறியிருக்கிறார். அப்படி எனில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பார்க்கிறது என்பது உறுதியாகியிருக்கிறது.
அதேநேரம் விசிகவுக்குள் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் சிலர் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக ஆளூர் ஷநவாரஷ் போன்றோர் திமுக உடன் கூட்டணியை தொடர வேண்டும் என்று வலியுறத்தி வருகின்றனர். இது திருமாவளவனுக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறது.
-
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்!












Click it and Unblock the Notifications