தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை விஜய் அறிவித்து வருகிறார். இதில் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தி நகர் தொகுதியில் புஸ்சி ஆனந்தும், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவும், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனும் போட்டியிடுவதாக விஜய் அறிவித்தார். விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட் வழங்கியுள்ளார் விஜய்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே இருக்கிறது. தேர்தல் நாள்கள் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழல தொடங்கியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகம்
2026 தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க திமுக கூட்டணியும், மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுகவும், போட்டியிடும் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என விஜய்யின் டிவிகேவும், நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளன. திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.
அதிமுக, நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையினையும் வெளியிட்டு தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறது. திமுக இன்று தேர்தல் அறிக்கையினை வெளியிடும் நிலையில் வரும் 31 ஆம் தேதி முதல் பிரசாரத்தை தீவிரப்படுத்துகிறது. இந்த நிலையில் தான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறது. தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.
விஜய்யின் நண்பருக்கும் சீட்
வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், தவெக இன்று தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் தவெக இன்று ஒரே நாளில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் வேட்பாளர்கள் இன்று அறிமுக கூட்டம் தொடங்கியது.
அப்போது தமிழகத்தில் அறிவிக்கப்படும் 234 வேட்பாளர்கள் மற்றும் புதுவையில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். இதில் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தி நகர் தொகுதியில் புஸ்சி ஆனந்தும், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவும், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனும் போட்டியிடுவதாக விஜய் அறிவித்தார்.
விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கு தூத்துக்குடியில் சீட் ஒதுக்கியுள்ளார் விஜய். இவர் குட்டி, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.
விஎஸ் பாபு, கு.ப கிருஷ்ணனுக்கு சீட்
இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள வேட்பாள்ர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். தவெக தலைவர் விஜய்யும் நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் நிர்வாகி விஎஸ் பாபு, கு.ப கிருஷ்னண் ஆகியோருக்கும் சீட் வழங்கப்பட்டு உள்ளது.
-
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி! -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு?












Click it and Unblock the Notifications