அமித்ஷா முன் அந்தர் பல்டி.. விஜய் மீது சட்டசபையில் உரிமைமீறல் கொண்டு வரப்படலாம்! தராசு ஷ்யாம் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் அந்தர் பல்டியாகவே பார்க்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். சட்டசபையில் 543 எம்பிக்கள் எண்ணிக்கையை தொடர வேண்டும் என்றும், 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிரான விஜய் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்று முதல்வர் விஜய் பேசியுள்ளார். தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் விஜய் பேசுகையில், லோக்சபாவில் மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதாசாரம் குறையாத வகையில் சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Delimitation

கடந்த வாரம் மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை மாற்றக் கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 543 எம்பிக்கள் என்ற எண்ணிக்கையை மாற்றக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து முதல்வர் விஜய் மாறி இருக்கிறார். இது தவெகவினர் மத்தியில் மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், தொகுதி மறுவரைறையில் 3 வகைகள் உள்ளன. அதாவது தொகுதி மறுவரையறை வேண்டாம் என்ற நிலைப்பாடு ஒன்று, நேர்மையான தொகுதி மறுவரையறை ஒரு நிலைப்பாடு, தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்கு நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு.. காங்கிரஸ் கட்சி 3வது நிலைப்பாட்டில் உள்ளது.

அதுதான் கர்நாடகா, கேரளா, தெலங்கானா நிலைப்பாடும் அதுதான். ஆனால் தமிழக சட்டசபை தீர்மானம் என்பது தனித்துவமானது. 543 என்ற எண்ணிக்கையை அப்படியே தொடர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் முதல்வர் வாசித்திருப்பது அந்த தீர்மானத்திற்கு நேர்மாறானது. விகிதாசாரம் மாறக் கூடாது என்று சொல்லி இருப்பதன் மூலம், நேர்மையான தொகுதி மறுவரையை வலியுறுத்துவதாகவே அர்த்தம்.

எம்பி எண்ணிக்கை கூடினால், எம்எல்ஏ மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். தற்போதைய சூழலில் தமிழ்நாடு நிலைப்பாடு என்பது சட்டசபை தீர்மானத்தைதான் எடுத்துக் கொள்ள வேண்டும். விஜய்யிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை. இது மிகப்பெரிய பிரச்சனை.. 25 ஆண்டுகளுக்கு தொகுதுஇ மறுவரையறை செய்யாமல், இதே எண்ணிக்கையில் தொடர வேண்டும் என்று கூறினால் தான் கோரிக்கை வைத்துள்ளோம் என்று அர்த்தப்படும்.

விஜய்யின் இந்த உரையில் இருந்து தமிழக அரசு நிலைப்பாடு என்ன என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் விஜய் இப்படி பேசி இருக்கிறார். இது அந்தர் பல்டியாகவே கருதப்படும். பாஜக என்ன சொல்லும் என்றால், அவர்களின் நிலைப்பாடு தான் தவெகவின் நிலைப்பாடும் என்று சொல்லும். நாளை சட்டசபையில் இதுதொடர்பாக பேசுவார்கள். சட்டப்பேரவையில் முதலமைச்சர் மீது உரிமை மீறல் கொண்டு வரப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+