விஜய் தான் நம்பர் 1.. ஒட்டுமொத்தமாய் சோசியல் மீடியாவில் 2.7 கோடி பேர்! ஸ்டாலின், அண்ணாமலை எங்கே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலமானவராக இருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை சுமார் 1 கோடியே 46 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். பேஸ்புக்கில் 77 லட்சம் பேரும், எக்ஸ தளத்தில் 55 லட்சம் பேரும் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவரை மொத்தமாக 2 கோடியே 78 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். ஒருவர் 3 தளங்களிலும் ஃபாலோ செய்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, விஜய் சுமார் 90 லட்சம் பேர் சராசரியாக ஃபாலோ செய்வது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு அடுத்த இடங்களில் இருக்கும் அரசியல் தலைவர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்?

ஃபேஸ்பும், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ள நிலையில், அதில் அரசியல்வாதிகள், நடிகர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் தங்களுக்கென தனி கணக்குகளை வைத்துள்ளனர்.

முதலில் அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் அடுத்த நாள் நாளிதழ்களில் வெளியாகும். பின்னர் அன்றே தொலைக்காட்சிகளில் வெளியாகும். ஆனால், தற்போது தலைவர்கள் அனைத்து நடவடிக்கைகளும் சமூக வலைதளங்களில் தான் முதலில் வெளியாகிறது. பின்னர் தான் டிவி, பேப்பரில் எல்லாம் வரும்

Vijay mk stalin annamalai

சமூக வலைத்தளம்

இதனால், உலக தலைவர்கள் தொடங்கி, உள்ளூர் பிரமுகர்கள் வரை சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களுக்கென லட்சக்கணக்கான ஃபாலோயர்களும் உள்ளன. அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை வைத்து தான், அவர்களுக்கான பிரபலத்தன்மையை கணிக்கு முடியும். அந்த வகையில், தமிழக அரசியல்வாதிகளில் சமூக வலைத்தளங்களில் அதிக பின்தொடர்பவர்களை பெற்றிருப்பவர் நடிகரும் 'தமிழக வெற்றிக் கழக'த்தின் தலைவருமான விஜய் ஆவார்.

நடிகர் விஜய்

விஜயை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 1 கோடியே 46 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். பேஸ்புக்கில் 77 லட்சம் பேரும், எக்ஸ் தளத்தில் 55 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். இதனை மொத்தமாகக் கணக்கிட்டால் 2 கோடியே 78 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். ஒரே நபர் மூன்றிலும் பின்தொடர்ந்து இருப்பதாகக் கருதினாலும், சராசரியாக சுமார் 93 லட்சம் பேர் விஜயை பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் பின்தொடர்வோர்

விஜய்க்கு அடுத்தபடியாக, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்ஸ்டாகிராமில் 18 லட்சம், பேஸ்புக்கில் 31 லட்சம், எக்ஸ் தளத்தில் 40 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். இதன் மூலம் சராசரியாக 30 லட்சம் பேர் அவரை பின்தொடர்கிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்ஸ்டாகிராமில் 63 ஆயிரம், பேஸ்புக்கில் 1.68 லட்சம், எக்ஸ் தளத்தில் 6.55 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். இதன் சராசரி 2.95 லட்சம் ஆகும்.

உதயநிதி அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இன்ஸ்டாகிராமில் 15 லட்சம், பேஸ்புக்கில் 5.77 லட்சம், எக்ஸ் தளத்தில் 10 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 10.25 லட்சம் பேர் அவரை பின்தொடர்கிறார்கள். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்ஸ்டாகிராமில் 98 ஆயிரம், பேஸ்புக்கில் 11 லட்சம், எக்ஸ் தளத்தில் 37 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 16.25 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இவர்களுக்குப் பிறகு வரும் தலைவர்களின் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.

ஃபாலோயர்ஸ்

விஜயின் சமூக வலைத்தளங்களில் பெற்றிருக்கும் மிகப்பெரிய வரவேற்புக்கான முக்கிய காரணம், அவர் ஏற்கனவே திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பதுதான். இதனால், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரை பின்தொடர்கிறார்கள். இதன் காரணமாக, திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும், தொண்டர்களூம் அவரை நடிகராக கருதி பின்தொடர வாய்ப்பு அதிகம். இந்த பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை நேரடியாக தேர்தல் வாக்குகளாகக் கருதுவது சரியானது அல்ல.

பிரதமர் நரேந்திர மோடி

காரணம், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்ஸ்டாகிராமில் மட்டுமே சுமார் 9 கோடியே 75 லட்சம் ஃபாலோயர்கள் இருக்கின்றனர். ஆனால் அதை விட, இந்திய கிரிக்கெட் வீரரும், ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலிக்கு 27 கோடியே 30 லட்சம் ஃபாலோயர்கள் இருக்கின்றனர். இதன் மூலம் ஃபாலோயர்களின் களின் எண்ணிக்கை பிரபலத்தன்மையைக் காட்டினாலும், அது அரசியல் ஆதரவாக மாறிவிடும் என்று பொருளல்ல என்பதும் தெளிவாகிறது. இருப்பினும், சமூக வலைத்தளங்களில் விஜயின் செல்வாக்கு தற்போது தமிழக அரசியல்வாதிகளில் எவராலும் எட்ட முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+