Big Boss 4 Promo: கஷ்டப்பட்டு சம்பாதித்த நல்ல பேரை கெடுத்துக்க விரும்பலை - அனிதா சம்பத் அழுகை
பிக்பாஸ் சீசன் 4 இன்றைய புதிய புரமோ வெளியாகியுள்ளது. அனிதா சம்பத் அழுகையோடு பேசுவதை புரமோவாக போட்டுள்ளனர்.
சென்னை: எங்க வீட்ல என்னோட பெற்றோர்கள் எனக்கு குழந்தை மாதிரி என்று கூறியுள்ளார் அனிதா சம்பத். ரொம்ப கஷ்டப்பட்டு நல்ல பெயர் சம்பாதித்திருக்கிறேன் அதை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் அழுது கொண்டே பேசிய புரமோ இன்று வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ கடந்த ஞாயிறு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. நான்காவது சீசனில் பிக்பாஸ் வீட்டிற்குள் 16 போட்டியாளர்கள் விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். முதல்வாரமே அமர்களமாக ஆரம்பித்துள்ளது.
அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி சண்டை கிச்சனில் ஆரம்பித்து பெரிதாக தொடங்கியிருக்கிறது. அனிதா சம்பத்திற்கு முதலில் அதிக ஆதரவு இருந்தது. சுரேஷ் சக்கரவர்த்திதான் தேவையில்லாமல் சண்டை பிடிப்பதாக பார்வையாளர்கள் கருதினர்.

அனிதாவின் பேச்சு
அனிதா மீதான ஆதரவு திடீரென மாறி சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஆதரவாக திரும்பியது. சுரேஷ் சக்கரவர்த்தி வயதானவர் என்றும் பார்க்காமல் அவரை பலரும் மரியாதை குறைவாக நடத்துவதாக பார்வையாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர்.

அனிதா ஓவர் பேச்சு
பிக்பாஸ் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே செய்தி வாசிப்பாளர் அனிதாவின் பேச்சு பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவராகவே இருக்கிறது என்பது பார்வையாளர்களின் கருத்து. எடக்குமடக்காக பேசி அவராகவே இப்போது பெயரை கெடுத்துக்கொண்டிருக்கிறார்.

அழுகை புரமோ
சுரேஷ் சக்கரவர்த்திதான் ட்டிரிக்கர் பண்றார் அவருக்கு புரமோவில் வரவேண்டும் என்பது ஆசை என்று சொன்ன அனிதா சம்பத் இப்போது தினசரியும் புரமோவில் வருகிறார். இன்றைக்கு முதலில் வெளியான புரமோவில் அனிதாவின் அழுகை காட்சிகள் வெளியாகியுள்ளது.

நல்ல பெயர் சம்பாதித்திருக்கிறேன்
நான் ரொம்ப கஷ்டப்பட்டு நல்ல பெயர் சம்பாதித்திருக்கிறேன் அந்த பெயரை கெடுத்துக்க விரும்பலை என்று கூறியுள்ளார் அனிதா சம்பத். எனக்கு அட்ரஸ் கிடையாது நமக்குன்னு ஒரு வீடு இருந்தா நல்லா இருக்கும் என்று நினைத்தாக கூறியுள்ளார் அனிதா.

என் பெற்றோர்கள் குழந்தை
எங்க வீட்ல நான்தான் பெரியவள் மாதிரி இருப்பேன். என்னோட பெற்றோர் தம்பி எல்லாம் குழந்தை மாதிரி. நான் ரொம்ப கஷ்டப்பட்டு என் வாழ்க்கையை கடந்து வந்திருக்கேன். யார் கூடவும் என்னை கம்பேர் பண்ணாதீங்க என்று அழுது கொண்டே கூறியிருக்கிறார் அனிதா. இன்றைய பிக்பாஸ் படு சுவாரஸ்யமாகவே இருக்கும். அனிதாவின் வாழ்க்கை கதையை கேட்கலாம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications