Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிக் டாக் சூர்யா தேவி VS விஜய் டிவி நாஞ்சில் விஜயன்! நிர்வாணமாக விரட்டிய புகார்களிடையே.. அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிக்டாக் பிரபலத்தை அவதூறாக பேசிய வழக்கில் விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் பெண் வேடத்தில் காமெடியில் கலக்குவார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தனக்கென யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். தனது வீட்டிலேயே செட் போல் அமைத்து யூடியூப் சேனலுக்கு தேவையான படப்பிடிப்புகளையும் நாஞ்சில் விஜயன் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு லாக்டவுனின் போது வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

வனிதாவுக்கு எதிராக சூர்யாதேவி

வனிதாவுக்கு எதிராக சூர்யாதேவி

இந்த சம்பவம் தொடர்பாக வனிதாவுக்கு எதிராக சூர்யாதேவி எனும் டிக்டாக் பிரபலம் களத்தில் இறங்கினார். அது போல் வனிதாவுக்கு ஆதரவாக ரவுடி பேபி சூர்யா பேசி வந்தார். இந்த நிலையில் சூர்யாதேவி, வனிதாவை மிகவும் மோசமான வார்த்தைகளால் வசைப்பாடினார். இதற்கு வனிதா பதிலடி கொடுத்தார்.

கஞ்சா வியாபாரி

கஞ்சா வியாபாரி

வனிதா அளித்த பேட்டியில் சூர்யாதேவி ஒரு கஞ்சா வியாபாரி, அவர் இரு முறை விவாகரத்து பெற்றவர். அவரது வீட்டில் இருந்து கிலோ கணக்கில் கஞ்சா இருக்கிறது. மேலும் அவருக்கும் அவரை பேட்டி எடுத்த நாஞ்சில் விஜயனுக்கும் தவறான தொடர்பு இருக்கிறது. இருவரும் சேர்ந்து கொண்டுதான் என்னை பற்றி அவதூறாக பேசுகிறார்கள் என கூறி நாஞ்சில் விஜயனும் சூர்யாதேவியும் நெருக்கமாக இருக்கும் ஒரு வீடியோவை செய்தியாளர்களிடம் வனிதா தரப்பு வழக்கறிஞர் காட்டினார்.

கோபமடைந்த சூர்யாதேவி

கோபமடைந்த சூர்யாதேவி

இதனால் கோபமடைந்த சூர்யாதேவி, நானும் நாஞ்சிலும் நண்பர்கள்தான். தேவையில்லாமல் நாஞ்சிலின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் என தெரிவித்தார். இதனால் நாஞ்சில் விஜயனுக்கும் சூர்யாதேவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இது குறித்து நாஞ்சில் விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் எனக்கு சூர்யாதேவியை 5 ஆண்டுகளாக தெரியும். சூட்டிங் வரும் போது பார்த்ததுதான். அவரை இன்டர்வியூ எடுக்க என்னை அழைத்தார். அதுதான் எனக்கு பிரச்சினையாக மாறிவிட்டது.

தொழில் பற்றி அவதூறு

தொழில் பற்றி அவதூறு

உடனே என்னை பற்றியும் என் தொழிலை பற்றியும் அவர் அவதூறாக வீடியோ வெளியிட்டு போட்டார். நான் உடனே அவரை தொடர்பு கொண்டு உனக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, என்னை பற்றி பேசாதே என கூறினேன். ஆனாலும் தொடர்ந்து என்னை பற்றி பேசிக் கொண்டே இருந்தார். அவரை பற்றி எனக்கு ஒரு சில தனிப்பட்ட விஷயங்கள் தெரியும். அவர் ஒருவருடன் பழகி கருக்கலைப்பு செய்த விஷயம் எல்லாம் எனக்கு தெரியும். அவருடைய தவறான புகைப்படங்கள் எல்லாமே என்னிடம் இருக்கிறது. எனக்கு வனிதாவுக்கு தொடர்பு இருப்பது போல் பேசினார். நான் ஏதோ தவறான புகைப்படங்களை வெளியிட்டதாக என் மீது சூர்யாதேவிக்கு கோபம் ஏற்பட்டது.

3 ரவுடிகளை அனுப்பிய சூர்யாதேவி

3 ரவுடிகளை அனுப்பிய சூர்யாதேவி

இந்த ஆத்திரத்தில் ஒரு நாள் இரவு சூர்யாதேவி என் வீட்டுக்கு 3 ரவுடிகளை அனுப்பினார். அப்போது நடிகை சீபா உள்ளிட்டோருடன் நான் என் வீட்டில் ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது வந்த ரவுடிகள் என்னையும் ஷூட்டிங்கில் இருந்த பெண்களையும் அடித்தனர். மேலும் என்னை தெரு முனைவரை அரைநிர்வாணமாக அந்த ரவுடிகள் ஓடவிட்டு கடுமையாக தாக்கினார்கள். இதையடுத்து நானும் என் தாக்கப்பட்ட பெண்களும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். இதன் பிறகு அடுத்த நாள் சூர்யா தேவி மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் இரு ஆண்டுகள் ஆறப்போடப்பட்டிருந்த நிலையில் தற்போது 2020 ஆம் ஆண்டு சூர்யாதேவியை அவதூறாக பேசி மிரட்டி தாக்கியதாக கூறப்பட்ட புகாரில் வளசரவாக்கம் போலீஸார் நாஞ்சில் விஜயனை கைது செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+