அரசியலுக்கு அச்சாரம் போடுகிறாரா நடிகர் பாலா! மனசுக்குள் பூட்டி வைத்துள்ள பெரிய ஆசை!
சென்னை: விஜய் டிவி புகழ் நடிகர் பாலா தொடர்ந்து தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வரும் நிலையில் மனசுக்குள் பூட்டி வைத்திருந்த பெரிய ஆசை ஒன்றை முதல்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய நிகழ்ச்சிகள் மூலம் புகழ் வெளிச்சத்துகு வந்தவர் நடிகர் பாலா. பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்து படிப்பில் கெட்டிக்காரராக திகழ்ந்த பாலா, டாக்டர் ஆவார் என அவரது பெற்றோர் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ நடிகராகி விட்டார். நடிப்புண்டு, வருமானமுண்டு என்று மட்டும் இருந்துவிடாமல் தொடர்ந்து தன்னால் எந்த வகையில் எல்லாம் உதவி செய்ய முடியுமோ அதனை மக்களுக்கு செய்து வருகிறார்.

பல இடங்களில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு இலவச ஆட்டோ சேவையை அண்மையில் தொடங்கி வைத்தார். வருமானமின்றி மருத்துவச் செலவுக்கு கூட பணமில்லாமல் தவிக்கும் நகைச்சுவை நடிகர்கள் பலருக்கு தன்னால் இயன்ற நிதியுதவியை செய்து வருகிறார். அதேபோல் அண்மையில் சென்னையில் மழை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட போது, 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 என்ற வகையில் சொந்தப் பணத்தை ரூ.2 லட்சம் செலவு செய்தார் நடிகர் பாலா.
கோடிகளில் ஊதியம் வாங்கும் மூத்த முன்னணி நடிகர்கள் பலரே கப்சிப்பென்று இருந்த போது நடிகர் பாலா மனம் கேட்காமல் உதவ முன்வந்தார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வேலூர் சென்ற அவரிடம் செய்தியாளர் ஒருவர், அரசியலுக்கு வரும் திட்டம் ஏதும் உள்ளதா என வினவினார். அதற்கு பதறிப் போய் பதிலளித்த நடிகர் பாலா, அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது என்றும் அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் இல்லை எனவும் கூறினார். இப்போது இப்படி சொல்பவர்கள் தான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார்கள். அதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் பலரை கூறலாம்.
இதனால் இப்போது இல்லாவிட்டாலும் அடுத்து வரும் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளில் நடிகர் பாலா அரசியலுக்குள் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஹீராவாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்கள் என்ற செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, தனக்கு ஹீரோ வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் வரும் வாய்ப்பை தவறவிட மாட்டேன் எனவும் மனசுக்கு பூட்டி வைத்டிருந்த ஹீரோ ஆசையை ஓபனாக உடைத்துவிட்டார் நடிகர் பாலா.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications