காமெடி நடிகர் வெங்கட்ராஜ் காலமானார்.. விஜய் டிவி பிரபலத்தின் உயிரை பறித்த மூச்சுத்திணறல்
சென்னை: விஜய் டிவியில் வெளியான‛லொள்ளுசபா' காமெடி நிகழ்ச்சியில் புகழ்பெற்று திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த வெங்கட்ராஜ் இன்று காலமானார். அவருக்கு வயது 68. மூச்சுத்திணறல் காரணமாக அவரது உயிர் பிரிந்தது.
விஜய் டிவியில் வெளியான ‛லொள்ளு சபா' நிகழ்ச்சியில் நடித்த பலரும் தமிழ் சினிமாவில் நடிகர்களாக நடித்து வருகின்றனர். சந்தானம் உள்பட பலரை நாம் உதாரணமாக கூறலாம். அந்த வரிசையில் ‛லொள்ளு சபா' நிகழ்ச்சியில் பேமஸானவர் தான் வெங்கட்ராஜ்.

ஒல்லியான உடலுடன் அவர் தனது காமெடி வழியாக ரசிகர்களை ஈர்த்தார். அதன்பிறகு திரைத்துறையிலும் கால்பதித்தார். தற்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன், நடிகர் சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், டிக்கிலோனா உள்பட இன்னும் பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தான் அவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். நுரையீரல் சார்ந்த பிரச்சனை அவருக்கு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் சென்னை மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே தான் அவர் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் இன்று அவர் காலமானார்.
திடீர் மூச்சுத்திணறல் காரணமாக அவரது உயிர் பிரிந்தது. மறைந்த வெங்கட்ராஜ்க்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். முன்னதாக இவர் மருத்துவ சிகிச்சைக்கு பணமின்றி தவித்துள்ளார். இந்த வேளையில் விஜய் டிவி பிரபலங்கள் உதவி செய்துள்ளன. குறிப்பாக கேபிஒய் பாலா, லொள்ளுசபா சுவாமிநாதன், ஜீவா உள்ளிட்டவர்கள் உதவி செய்துள்ளனர்.
எப்படியாவது வெங்கட்ராஜை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று காலமாகி உள்ளார். வெங்கட்ராஜின் இறுதி சடங்குகள் நாளை சென்னை வேளச்சேரியில் நடைபெற உள்ளது. வெங்கட்ராஜின் மறைவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவருக்கு பலரும் வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர்












Click it and Unblock the Notifications