CWC புகழ் மகளுக்கு 1 வயசுதான் ஆகுது! ஆனாலும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் ரித்தன்யா! குவியும் பாராட்டு
சென்னை: விஜய் டிவி பிரபலம் புகழின் மகள் ரித்தன்யா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அப்படி 1 வயதாகும் அந்த குழந்தை என்னதான் செய்திருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
விஜய் டிவியில் கலக்க போவது யாரு, அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் காமெடி செய்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் புகழ். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து ரசிகர்களை அதிகம் சம்பாதித்துவிட்டார்.

குக் வித் கோமாளியில் புகழின் காமெடியை பார்த்து நிறைய பேருக்கு உடல்நிலை சரியானதாக அவர்களுடைய உறவினர்கள் எல்லாம் சமூகவலைதளங்களில் தெரிவித்திருந்தனர். இதன் மூலம் அவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது.
சிக்ஸர், கைதி, காக்டெயில், சபாபதி, மிஸ்டர் ஜூ கீப்பர், வலிமை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பென்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரித்தான்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த குழந்தைக்கு அண்மையில்தான் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழாவை புகழ் கோலாகலமாக கொண்டாடினார். இந்த விழாவுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்புதான் உணவு ஆர்டர் எடுத்திருந்தது. இந்த நிலையில் புகழின் மகள் ரித்தான்யா சாதனை புரிந்துள்ளதால் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
அதாவது அதிக நேரம் டம்பெல்ஸை தூக்கி குழந்தை என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். 2 கிலோ கொண்ட டம்பெல்ஸை 17 வினாடிகள் பிடித்து சர்வதேச சாதனை படைத்துள்ளார் என கின்னஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 12 ஆம் தேதி காஞ்சிபுரத்தை சேர்ந்த ரித்தன்யா புகழேந்தி, 2 கிலோ டம்பல் வைத்திருக்கும் மிக நீண்ட நேரம் வைத்திருந்த குழந்தை" என்ற உலக சாதனையை படைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் புகழுக்கும் அவரின் மகள் ரித்தயாவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications