விஜய் டிவி ரீல் ஜோடி ரியலாக இணைந்தது.. விஷ்ணுகாந்த் சம்யுக்தாவிற்கு குவியும் வாழ்த்து!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த விஷ்ணுகாந்த் - சம்யுக்தா இருவரும் மண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.
சென்னை: சின்னத்திரை சீரியல்களின் ஜோடியாக நடித்த பலரும் நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்து வாழ்கின்றனர். சிலர் லிவ் இன் வாழ்க்கையில் இருந்தாலும் பலர் மண வாழ்க்கையில் இணைந்து விடுகின்றனர். அப்படி ரீல் ஜோடி ஒன்று ரியல் ஜோடியாக மாறியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து சீரியல் ஜோடியான விஷ்ணுகாந்த் சம்யுக்தா மண வாழ்க்கையில் அடி எடுத்து வைத்துள்ளனர்.
நான் உன்னுடன் இருக்கும்போது நன்றாக உணர்கிறேன். என் வாழ்க்கையில் வந்ததற்கு மிக்க நன்றி. இந்த பிறந்தநாளில் இருந்து உன்னுடன் என் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாக இருக்கும் என்று ஒரு பிறந்தநாளில் விஷ்ணு காந்த் உடனான தனது காதலை வெளிப்படுத்தினார் சம்யுக்தா.

விஷ்ணுகாந்த் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலிலும் இதற்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த கோகுலத்தில் சீதை சீரியலிலும் நடித்திருக்கிறார். அதுபோல சம்யுக்தா நிறைமாத நிலவே எனும் சீரியல் மூலமாக பிரபலமானவர்தான்.
இவர்கள் இருவரும் சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தங்களுடைய காதலை மறைத்து வைத்திருக்கின்றனர். இருவரும் ஒன்றாக நடித்த சிப்பிக்குள் முத்து சீரியல் கடந்த ஆண்டு முடிவடைந்த நேரத்தில் காதலை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினர்.
நடிகை சம்யுக்தா தன்னுடைய மனம் கவர்ந்த விஷ்ணுகாந்த்தை டேக் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் எல்லா குழப்பங்களுக்கும் நடுவில் நான் உன்னை கண்டேன். நீங்கள் உண்மையிலேயே என் புன்னகையின் அளவு. என் வாழ்வின் அனைத்து துன்பங்களையும் மகிழ்ச்சியாக மாற்றியவர்.
நான் உங்களுடன் இருக்கும்போது என்னை நன்றாக உணர்கிறேன். என் வாழ்க்கையில் வந்ததற்கு மிக்க நன்றி. இந்த பிறந்த நாளிலிருந்து உங்களுடன் என் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாக இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

உங்கள் அனைவரின் ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் பெற விரும்புகிறோம். இதுவரை நீங்கள் எனக்கு கொடுத்த அன்பு தான் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆதரவாகும். இப்போது நாங்கள் அனைவரும் அதை உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பாக பெற விரும்புகிறோம். உங்கள் அன்பான இதயத்தால் எங்கள் இருவரையும் ஆசீர்வதியுங்கள் என்று சம்யுக்தா வெளியிட்ட பதிவிற்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அபினவ், பொன்னியாக நடித்த ரியல் ஜோடியான விஷ்ணுகாந்த் சம்யுக்தா இப்போது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். காதலர்களாக வலம் வந்தவர்கள் இனி தம்பதியராக வலம் வர உள்ளனர். தங்களின் திருமண விழா புகைப்படங்களை சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புதுமண தம்பதியினருக்கு ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications