கேரளாவில் விஜய் அலை.. ஆச்சர்யத்தில் ஆழ்ந்த பினராயி விஜயன்.. அதிர வைத்த சர்வே ரிப்போர்ட்.. ட்விஸ்ட்
சென்னை: விஜய்யை மையப்படுத்தி தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளாவிலும் அரசியல் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் விஜய்க்கு இருக்கும் ரசிகர்களின் ஆதரவு பிரதான கட்சிகளின் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது.
இதனால், ஆளும் கட்சியான திமுகவும் தனது கூட்டணி வலிமையை பெருக்கிக் கொள்ள வழி வகுத்தது. அதேபோல, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-பாஜக கூட்டணியும் தங்கள் கூட்டணிக்குள் விஜய்யை கொண்டுவர ஏகப்பட்ட முயற்சிகளை எடுத்தன. இடையில் இந்த முயற்சி தடைப்பட்ட நிலையில், ரகசியமாக மீண்டும் அந்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இதில், சிக்கிக்கொள்ளாமல் நழுவிக்கொண்டே இருக்கிறார் விஜய்.

கேரளா விஜய் பிளான்
இந்த நிலையில், கேரளாவில் ஆளும் கட்சியான சி.பி.எம். மிற்கு எதிரான அலை கேரளாவில் வீசுவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த முறை, முதல்வர் பினராயி விஜயன் ஆட்சி வீழ்த்தப்பட்டு ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றும் என்கிற சூழல் உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் கேரளாவில் விஜய்க்கு 4 முதல் 5 சதவீத ஆதரவு இருப்பதாக சமீபத்தில் கம்யூனிஸ்ட் தோழர்கள் எடுத்துள்ள சில சர்வே முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளனவாம். இதனால் சி.பி.எம். கூட்டணிக்குள் விஜய் இணைந்தால் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என கூட்டிக்கழித்து முடிவுக்கு வந்ததாம் கேரள மாநில சி.பி.ஐ. தலைமை.
ஆனால், தமிழகத்தில் விஜய்யுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முயற்சித்து வந்ததால் தங்களின் யோசனைகளை அப்படியே கிடப்பில் வைத்திருந்திருக்கிறது கேரள ஆளும் கட்சி. தற்போது, தமிழகத்தில் தனித்து விடப்பட்டுள்ளார் விஜய்.
பினராயி விஜயன் ஆச்சர்யம்
இந்த நிலையில், முதல்வர் பினராயி விஜயன், சிபிஎம்மின் தேசிய பொலீட்பிரோ தலைவர்களிடம் சமீபத்தில் கேரள தேர்தல் குறித்து விவாதித்துள்ளார். அப்போது, கேரளாவில் நடிகர் விஜய்க்கு இருக்கும் ஆதரவு மற்றும் எடுக்கப்பட்ட சர்வேக்களை மையமாக வைத்து பேசிய அவர், சி.பி.எம். கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். தமிழகத்திலுள்ள சி.பி.எம். தலைவர்கள் மூலம் விஜய்யிடம் பேசிப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார் பினராயி விஜயன்.
நல்ல யோசனைதான் என நினைத்த சி.பி.எம். கட்சியின் தேசிய தலைமை, இது குறித்து தமிழக சி.பி.எம். தலைவர்களிடம் விவாதித்துள்ளது. ஆனால், தமிழக தலைவர்களோ, ''திமுக கூட்டணியில் நாம் கௌரவமாக இருக்கிறோம். கூட்டணியில் இருந்தாலும் நம்முடைய தனித்த அடையாளத்திற்கு எந்த சிக்கலும் நேரவில்லை. ஒரு நடிகரை நம்பி தமது சுயத்தை சி.பி.எம். இழந்துவிடக்கூடாது.
தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, கேரளாவில் கூட்டணி வைப்பது சரியாக இருக்காது. அதுவும், தமிழக சிபிஎம், இதைபற்றி அந்த நடிகரிடம் விவாதிக்க முயற்சிப்பதை திமுக தலைமையும் விரும்பாது. அதனால், எங்களால் முடியாது. கேரளா அரசியலுக்காக, வாய்ப்பிருந்தால் நீங்களே நடிகரை தொடர்புகொள்ள முயற்சியுங்கள். நாங்கள் பேச திட்டமிடுவது ஆரோக்கியமாக இருக்காது என்று தேசிய தலைமையிடம் தெரிவித்து விட்டார்களாம்.
ஹாட் டாபிக் இதுதான்
தமிழக சிபிஎம் தோழர்களிடம் தற்போது எதிரொலிக்கும் ஹாட் டாபிக் இதுதான். சீட் ஷேரிங்கில் திமுகவிடம் முரண்பட்டு அசாதாரணமான நிலையில் சி.பி.எம். வெளியேறும் சூழல் உருவானால் அப்போது தமிழக சிபிஎம், விஜய்யிடம் பேசுவதற்கு முன் வரலாம். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இருக்காது. ஏனெனில், திமுகவின் கூட்டணி கட்சிகளை சிந்தாமல் சிதறாமல் அரவணைத்துத் தக்கவைத்துக்கொள்ளும் கலையை நன்கு அறிந்து வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதனால் அவ்வளவு எளிதாக சி.பி.எம். அப்படி ஒரு முடிவை எடுக்கும் சூழல்களுக்கு தள்ள மாட்டார் ஸ்டாலின் என்கிறார்கள் சி.பி.எம். தோழர்கள்.
விஜய்யின் அரசியல் தமிழகத்தை கடந்தும் பல மாநிலங்களில் எதிரொலிக்கவே செய்கிறது.
-- சிறப்பு நிருபர் எழில்
-
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications