காங்கிரஸ், பாஜக கோட்டையில் குறிவைக்கும் தவெக.. விஜய்யின் பிரச்சார பயணம் தற்செயலானது அல்ல!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் கவனம் செலுத்தி வருவது தெரிய வந்துள்ளது. தேசிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் தவெக ஆதிக்கத்தை விஜய் கொண்டு முயற்சிப்பதாகவும், அது விஜய்யின் பயணத் திட்டத்தின் மூலமாக புரிந்து கொள்ள முடியும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சார பயணத்தில் ஒரு முக்கிய வியூகத்தைக் கையாண்டு வருகிறார். குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் விஜய் அதிக கவனத்தை செலுத்தி வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் விஜய் முதற்கட்டமாக வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதன்பின் காரைக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் விஜய் ரோடு ஷோ மற்றும் பிரச்சாரத்தில் மேற்கொண்டார். அடுத்ததாக திருப்பூர் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மற்றும் ரோடு ஷோவுக்கு அனுமதி பெற்றுள்ளார்.
இந்த மாவட்டங்களில் காங்கிரஸ், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அதிக செல்வாக்கு பெற்றுள்ளன. விஜய்யின் அரசியல் வருகை காரணமாக காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற தேசியக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அதேபோல் இளம் வாக்காளர்கள் மற்றும் 'மாற்றம்' வேண்டும் என நினைப்பவர்களை விஜய் குறிவைக்கிறார்.
இதன் மூலமாக் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் வலுவாக இருக்கும் தொகுதிகள் அல்லாமல், சாதிய கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை குறி வைத்து விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார். விஜய்யின் இந்தப் பயணத் திட்டம் வெறும் தற்செயலானது அல்ல.. இது ஒரு துல்லியமான அரசியல் கணக்காகவே பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் திராவிடக் கட்சிகளின் பிடியில் இல்லாத அல்லது தேசியக் கட்சிகள் பலவீனமாக இருக்கும் இடங்களைக் கைப்பற்றுவதன் மூலம், சட்டசபையில் ஒரு வலுவான முத்திரையைப் பதிக்க முடியும் என்று விஜய் நம்புகிறார். அதன் காரணமாக வெற்றிபெற வாய்ப்புகளை தொகுதிகளில் விஜய்யின் பிரச்சாரம் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் இல்லாமல் சிறுபான்மை மக்கள், மீனவர்கள், தேசியக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளை குறி வைத்தே விஜய் பயணிக்க தொடங்கி இருக்கிறார். இதன் மூலமாக விஜய் இந்த தொகுதிகளில் குறைந்தது 2ஆவது இடத்தையாவது பிடிக்க முடியும் என்று நம்புவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி -
3 மாதங்களில் கோவில் பிரசாதத்தை அரசே தயாரித்து விற்கும்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications