Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் ரசிகர்களை மட்டுமே நம்பியுள்ளார்.. தவெக ஒரு தேர்தலை கூட சந்தித்ததில்லை.. எடப்பாடி பழனிசாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் முழுக்க முழுக்க ரசிகர்களை மட்டுமே நம்புவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுவரை ஒரு தேர்தலை கூட விஜய் சந்திக்கவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒரு தேர்தலிலாவது போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை நிரூபிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று என்டிடிவியின் தமிழ்நாடு சம்மிட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அரசியல் பிரமுகர்கள் தங்களின் கருத்துக்களை அதில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

EPS vs Vijay

இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் ஒரே குடும்பம் அதிகாரத்தில் இருப்பதை தான் மக்கள் வெறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஊழல் தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. எது சிறந்த ஆட்சி என்பதை மக்கள் ஜெயலலிதா தலைமையில் நடந்த ஆட்சியில் கண்டு உணர்ந்தனர்.

திமுகவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தலைமை பொறுப்புக்கு வர முடியும். ஆனால் அதிமுகவில் அப்படி கிடையாது. யார் உண்மையாக உழைக்கிரார்களோ, அவர்கள் முதல்வராக முடியும். வாரிசு அரசியலை முடிவுக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். செந்தில் பாலாஜியை அருகில் வைத்துக் கொண்டு ஸ்டாலின் ஊழல் பற்றி பேசுகிறார்.

எங்களை எதிர்கொள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் கிடையாது. அதன் காரணமாக என்டிஏ கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். என்டிஏ கூட்டணி தேசிய அளவில் பாஜகவால் உருவாக்கப்பட்டது. அதற்கு தமிழ்நாட்டில் அதிமுக தான் தலைமை. அதனை அமித்ஷாவும் கூறிவிட்டார். பாஜக கூட்டணியில் இணைவ எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை.

இவ்வளவு பேசும் திமுக, 1999 லோக்சபா தேர்தலில் ஏன் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது? கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டும்தான். இங்கே கொள்கை மட்டுமே நிரந்தரம். சட்டசபைத் தேர்தலுக்கு அதிமுக தயாராகிவிட்டது. 180 தொகுதிகளில் கூட்டங்களை நடத்தி தயாராக இருக்கிறோம். மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். ஒற்றை கருத்துடைய கட்சிகள் இணைய வேண்டும்.

அதேபோல் விஜய் சிறந்த நடிகர் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. விஜய் இதுவரை ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. ஒரு தேர்தலிலாவது போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை நிரூபிக்கட்டும். மற்ற கட்சிகள் அனைத்தும் தேர்தலில் போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை நிரூபித்திருக்கிறார்கள். விஜய் முழுக்க முழுக்க ரசிகர்களை நம்பி மட்டுமே இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+