Vijay: தமிழகத்தில் வரலாற்றை மாற்றும் விஜய்.. புதுவையில் எப்படி? நினைத்து பார்த்திராத அதிர்ச்சி
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி அதிமுக கூட்டணி, தவெக , நாம் தமிழர் கட்சி இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் தற்போதைய நிலவரப்படி விஜய் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 100 இடங்களை தாண்டி விஜய் முன்னிலை பெற்றுள்ளார்.
11 மணி நிலவரப்படி விஜய்யின் தவெக 111 இடங்களிலும் அதிமுக 69 இடங்களிலும் திமுக 54 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தமிழ்நாட்டு அரசியலில் வரலாறு படைக்க விஜய் தயாராகிவிட்டார் என்ற சூழலில் புதுவையில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

தமிழகத்தில் கலக்கும் விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி அதிமுக கூட்டணி, தவெக , நாம் தமிழர் கட்சி இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் தற்போதைய நிலவரப்படி விஜய் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
100 இடங்களை தாண்டி விஜய் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 11 மணி நிலவரப்படி விஜய்யின் தவெக 111 இடங்களிலும், அதிமுக 69 இடங்களிலும் திமுக 54 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தமிழ் நாட்டு அரசியலில் வரலாறு படைக்க விஜய் தயாராகிவிட்டார் என்ற சூழலே உருவாகியுள்ளது. இதனால் விஜய்யின் வீடு முன்பும் தவெக தொண்டர்கள் குவிந்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
புதுவையில் பரிதாப நிலை
இன்னும் பல சுற்று வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் தவெகவினர் இப்போதே கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழக வரலாற்றில் புதிதாக கட்சி தொடங்கி 100 தொகுதிகளுக்கு வெற்றி பெறுவார் என்ற சூழல் உள்ள நிலையில், புதுவையில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
தமிழக சட்டமன்ற விஜய்யின் தவெக தூள் கிளப்பி வரும் நிலையில், புதுவையில் தவெகவின் நிலை அந்தோ பரிதாபமாக உள்ளது. தமிழகத்தை போலவே விஜய்யின் தவெக புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் 28 தொகுதிகளில் நேரடியாக களம் கண்டது. 2 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கியது. ஆனால் புதுவையில் விஜய் கட்சியால் ஒரு இடங்களில் கூட வெல்ல முடியாத நிலையே தற்போது உள்ளது.
ஒரு இடங்களில் கூட முன்னணியில் இல்லை
புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியே முன்னிலை வகிக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி புதுவையில் இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தட்டாஞ்சாவடியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரத்தை வைத்து பார்த்தால் ரங்கசாமி முதல்வர் பதவியை தக்க வைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வியக்க வைத்த விஜய்யால் புதுவையில் ஜொலிக்க முடியவில்லை. புதுவையில் 28 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட்டது. நேமக கட்சி 2 இடங்களில் போட்டியிட்டது.
ஆனால், இதில் எதுவுமே தவெக முன்னிலை பெறவில்லை. தற்போதைக்கு போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தவெக பின்னடைவை சந்தித்துள்ளது. விஜய் அங்கு பிரசாரம் செய்த போது அங்கு பெருங்கூட்டம் கூடியது. ஆனால் அங்கு விஜய்யால் புதுவையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
-
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
உள்துறை பொறுப்பை வேறு அமைச்சருக்கு ஒப்படைக்க முதல்வர் விஜய் திட்டம்? தமிழக அரசியலில் பரபரப்பு! -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
தமிழக அரசியலில் விஜய்யின் புதிய 'ஃபார்முலா'.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் ஏன் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்? -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி!












Click it and Unblock the Notifications