பாஜக கூட்டணிக்கு போகும் விஜய்? மறுக்காத சிடிஆர் நிர்மல் குமார்.. கொடுத்த விளக்கத்தை பாருங்க
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் தனித்து போட்டியிட இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களாக விஜய், பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பலமாக பேச்சு அடிபடுகிறது. இது தொடர்பாக நேற்று வரை மவுனம் காத்து வந்த தவெக முகாம், இன்று இவ்விவகாரத்தில் நேரடியாக மறுக்காமல் பட்டும் படாமல் பதிலளித்துள்ளது. பாஜக - தவெக கூட்டணி வதந்திகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சிடிஆர் நிர்மல்குமாரின் கருத்து அமைந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக் கப்பட வாய்ப்பு உள்ளது. ஜனநாயக திருவிழா தொடங்க இருப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பிசி அடைந்துள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, பிரசாரம் என அரசியல் களம் அனல் பிடிக்க தொடங்கியுள்ளது.

பாஜக கூட்டணியில் விஜய்?
திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முழுவீச்சில் நடத்தி வருகிறது. காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட பல கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு இறுதி செய்துவிட்டது. தேமுதிக புதிதாக அக்கட்சியில் இணைந்துள்ளதால் தொகுதி பங்கீடை இறுதி செய்வதில் காலம் கடந்து வருகிறது. இன்னொரு புறம் அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு நிறைவடையவில்லை.
அன்புமணி பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும் அந்த கூட்டணி புதிதாக களத்திற்கு வருகை தந்துள்ள விஜய்யை தன் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. விஜய்யும் திமுகவை தீவிரமாக விமர்சித்து வருவதாலும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை கருத்தில் விஜய் அதிமுக பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என அக்கட்சியில் உள்ளவர்கள் பேசி வருகிறார்கள்.
துணை முதல்வர், 45 தொகுதிகள்?
இந்த சூழலில் தான் விஜய்க்கு துணை முதல்வர் பதவி, 45 தொகுதிகள் என பாஜக ஆஃபர் கொடுத்து என்.டி.ஏ கூட்டணிக்குள் இணைக்க ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளிவந்தன. அடுத்தடுத்து தொடர்ந்து விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வரவே பாஜக விரும்புவதாகவும் பேசப்பட்டது. ஆனால் விஜய் இதனை நிராகரித்து விட்டதாக தகவல் வந்தன.
இதற்கிடையே விஜய்யின் தவெக திடீரென மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியதாகவும், அதில் பெரும்பான்மையானோர் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறியதாகவும் தகவல் வெளிவந்தன. அதாவது நேற்று தவெக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடந்தது என்றும், இதில், தவெக அமைப்பு ரீதியான 132 மாவட்டங்களை சேர்ந்த, மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர் என்றும் தகவல் வெளி வந்துள்ளது.
நிர்மல் குமார் விளக்கம்
நேற்று மதியம் 3 மணி முதல் 5 மணி வரை நடந்தது எனவும் இதில் 95 மாவட்ட செயலாளர்கள் கூட்டணிக்கு செல்லலாம் என்று கருத்து தெரிவித்தாக தகவல் வெளியாகின. இதையடுத்து இவ்விவகாரம் குறித்து விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணைகிறதா என்பதற்கு தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் பதில் அளித்துளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "மக்கள் பிரச்சனைகளிலிருந்து, அனைவரின் கவனத்தையும் திசை திருப்பும் நோக்கத்தில், வழக்கம் போலவே தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தை தொடர்புப் படுத்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக யூகங்களின் அடிப்படையில் தினசரி பல்வேறு செய்திகள் பரப்பப்படுகிறது.
நயினார் நாகேந்திரன் சொன்னது என்ன?
கழக நிகழ்ச்சிகள் உள்ளிட்ட, கழகத்தின் சார்பாக வரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை மட்டுமே கழகத் தோழர்கள் பின்பற்றவும்" என்று பதிவிட்டுள்ளார். அதிமுக பாஜக கூட்டணியில் தவெக இணைப்போகிறது என்று தகவல் பரவி வரும் நிலையில் அதனை மறுக்கும் விதமாக நேரடியாக பதில் அவர் கூறவில்லை. பாஜக கூட்டணியில் தவெக இணையவில்லை என்று வெளிப்படையாக கூறவே இல்லை..
பாஜகவுடன் விஜய் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில், அதனை மறுக்காமல் பட்டும் படாமல் மழுப்பலாக சிடிஆர் நிர்மல் குமார் பதிலளித்து இருப்பது, அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. அதே போல் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் இதுவரை என்.டி.ஏ - தவெக கூட்டணி தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று கூறி வந்த நிலையில், விஜய் என்.டி.ஏவில் இணையப்போகிறாரா என்ற கேள்விக்கு, டெல்லி தலைமை முடிவு எடுக்கும் என இன்று கூறியிருக்கிறார்.
அதிமுக பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் எல்லாவற்றையும் பார்க்கும் போது என்.டிஏ கூட்டணியில் தவெக இணையப்போகிறது என்பதை உறுதிப்படுத்துவதாகவே உள்ளதாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
-
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
Khushbu Sundar: தவெகவுக்கு 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்களா? குஷ்பு தடாலடி கேள்வி! -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!














Click it and Unblock the Notifications