நீயா நானாவில் மும்மொழி கொள்கை விவாதம் ரத்து! திமுக ஸ்க்ரிப்ட் என்கிறார் அலிசா அப்துல்லா! என்னவாம்?
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் நேற்று பிரபல விவாத நிகழ்ச்சியான நீயா நானாவில் மும்மொழி கொள்கை தொடர்பான விவாதம் ஒளிபரப்பாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு வேறு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிலையில் மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதம் என்ற பெயரில் திமுக எழுதிய ஸ்கிரிப்ட் தான் அந்த நிகழ்ச்சி எனவும், அதில் கலந்து தன்னை அழைத்தும் அதில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறியிருக்கிறார் பாஜக பிரமுகரான அலிசா அப்துல்லா.
தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்வி தொடர்பாக தமிழக அரசு பாஜக தலைமையிலான மத்திய அரசு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி தருவோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல மாறிவிட்டது.

தொடர்ந்து திமுக பாஜக இடையே மோதல் போக்கும் நிலவி வருகிறது. இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமையில் ஒளிபரப்பாகும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் நேற்று மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக விவாதம் நடந்தது.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்களும், மும்மொழி கொள்கை எதிர்ப்பாளர்களும் கலந்து கொண்டு விவாதம் செய்த நிலையில் சமூக வலைதளங்களிலும் விளம்பரம் வெளியானது. தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு அந்த பதிவு நீக்கப்பட்ட நிலையில் இன்று நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமல் அதற்கு பதிலாக வேறொரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதற்கிடையில் பாஜக அழுத்தத்தின் காரணமாகவே அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், இந்த நிலையில் நீயா நானாவில் மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதம் என்ற பெயரில் திமுக எழுதிய ஸ்கிரிப்ட் எனவும், அதில் கலந்து தன்னை அழைத்தும் அதில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறியிருக்கிறார் பாஜக பிரமுகரான அலிசா அப்துல்லா. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," 01.03.2025 அன்று நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நீங்கள் பேச வேண்டும் என்று எனக்கு ஒரு அழைப்பு வந்தது.
நான் சிறிது நேரத்தில் கூப்பிடுகிறேன் என்று அழைப்பை துண்டித்து விட்டேன்.பிறகு எனக்கு மீடியாவில் நன்கு தெரிந்த ஒருவரிடம் பேசினேன். இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளலாமா என்று கேட்டேன். அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இது திமுகவின் ஸ்கிரிப்ட் எனவும், தலைப்பு மட்டும் தான் மும்மொழி கொள்கை ஆதரவு மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு. ஆனால் எடுத்துச் செல்வது தமிழ் VS இந்தி என்று எடுத்துச் சொல்வார்கள். ஸ்கிரிப்டு உடைய சுருக்கம் என்னவென்றால் மும்மொழிக்கு ஆதரவாக ஒரு பெண்ணும் மும்மொழிக்கு எதிர்ப்பாக அந்தப் பெண்ணுடைய தந்தையும் பேசுவது தான் ஸ்கிரிப்ட்.
நிகழ்ச்சியின் முதல் பகுதியில் மும்மொழிக்கு ஆதரவாக பேசும் பெண்ணை நன்றாக பேச விடுவார்கள் இரண்டாம் பகுதியில் அந்த பெண்ணுடைய தந்தை பேசுவார். இவர்களுடைய கதை சுருக்கம் என்னவென்றால் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பேசும் பெண்ணை, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பாக பேசும் தந்தை அடக்குவது தான். பெண்ணை விடியற்காலையில் தனியார் இந்தி வகுப்பிலும் இரண்டாவது மொழியாக இந்தியை தேர்ந்தெடுத்து படிக்கும் பள்ளிக் கூடத்திலும் படிக்க வைத்துள்ளார்.
நீயா நானாவில் திமுகவின் அரசியல் !!!
— Dr. Alisha Abdullah (@alishaabdullah) March 16, 2025
01.03.2025 அன்று நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நீங்கள் பேச வேண்டும் என்று எனக்கு ஒரு அழைப்பு வந்தது.நான் சிறிது நேரத்தில் கூப்பிடுகிறேன் என்று அழைப்பை துண்டித்து விட்டேன்.பிறகு எனக்கு மீடியாவில் நன்கு தெரிந்த… pic.twitter.com/odkQGgczKv
தற்போது அந்த பெண் கல்லூரி வரை வந்து விட்டார். ஆனாலும் அந்த பெண்ணுக்கு இந்தி ஒரு வார்த்தை கூட பேச தெரியவில்லை என்பது தந்தையின் குற்றச்சாட்டு. தன்னுடைய மகளை காசு கொடுத்து 8வயது முதல் 18வயது படிக்க வைத்து ஒரு வார்த்தை கூட இந்தி பேச தெரியவில்லை. இதனால் மூன்றாவதாக ஒரு மொழியை படிப்பதினால் எந்த ஒரு பலனும் இல்லை என்று நிகழ்ச்சியை நிறைவு செய்வார்கள் சொன்னார் அந்த நிகழ்ச்சியை நான் தவிர்த்து விட்டேன்.
நிகழ்ச்சி நடந்த சில புகைப்படங்கள் அந்த நிகழ்ச்சி 9.00நேரம் எடுக்கப்பட்டும் சரியாக வரவில்லை. அதனால் நீயா நானா குழுவினர் அதை தவிர்த்து இருக்கலாம். தான் இயற்றிய நாடகத்தை அரங்கேற்ற முடியவில்லை என்று திமுக கொத்தடிமைகள் சமூக வலைத்தளத்தில் ஒப்பாரி வைத்துக்கொண்டு உள்ளனர். இந்த ஸ்கிரிப்ட்டில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மும்மொழிக்கு கொள்கைக்கு எதிர்ப்பாக பேச களம் இறங்கியவர்களில் 60% திமுகவினர்" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications