விஜய்க்கு அடிமேல் அடி.. ஸ்டாலின் - எடப்பாடி - சீமானிடம் பின்தங்கிய தவெக.. இந்த 2 மேட்டரை கவனிச்சீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் புதிய கட்சியாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என்ட்ரி கொடுத்து தனித்து களமிறங்கி உள்ளது. அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சீமானும் தனித்து 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சீமானிடம் தோற்றுப்போய் உள்ளார். இதுபற்றிய 2 விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் தனித்து களமிறங்கி உள்ளது. 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் எடப்பாடி தொகுதியில் வேட்பாளர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 233 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.

vijay-unable-to-set-a-trend-in-the-tamil-nadu-assembly-election-and-tvk-defeated-by-stalin-edappadi

இந்த தேர்தலில் விஜய் 2 தொகுதிகளில் களமிறங்கி உள்ளார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிகளில் அவர் போட்டியிட்டுள்ளார். இரு தொகுதிகளிலும் அவரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

மிஸ்ஸான டிரெண்ட்

விஜயை எடுத்து கொண்டால் தேர்தலை திமுக - தவெக இடையேயான போட்டியாக கட்டமைக்க நினைத்தார். இதனால் பிரசாரங்களில் எல்லாம் திமுகவுக்கும், தவெகவிற்கும் இடையே தான் போட்டி என்று கூறிவந்தார். இதன்மூலம் அதிமுக, சீமானின் நாம் தமிழர் கட்சியை தவெக பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை என்பதை விஜய் வெளிப்படுத்தினார். ஆனால் தற்போது தேர்தல் களமோ திமுக VS அதிமுக என்று மாறிவிட்டது.

ஸ்டாலின் - எடப்பாடியிடம் வீழ்ந்த ஸ்டாலின்

விஜய் தேர்தல் பரப்புரையை அடிக்கடி ரத்து செய்து வருவது தான் இதற்கு முக்கிய காரணம். மேலும் பல்வேறு கருத்து கணிப்புகளிலும் திமுக - அதிமுகவுக்கு சாதகமாக தான் வந்துள்ளன. தவெகவுக்கு சாதகமாக அமையவில்லை. இதனால் திமுக - தவெக இடையே தான் போட்டி என கட்டமைக்க முயன்ற விஜயின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம் விஜயை, முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வீழ்த்தி விட்டனர். மேலும் அரசியலில் டிரெண்ட் செட்டிங் என்பது மிகவும் முக்கியம். அதில் விஜய்க்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

விஜய் VS சீமான்

அதேபோல், தற்போது இன்னொரு புதிய டேட்டா வெளியாகி உள்ளது. அதாவது விஜய், சீமானை விட ஒரு விஷயத்தில் பின்தங்கி உள்ளார். அரசியலில் விஜய் புதிதாக வருகை தந்துள்ளார். மாஸ் நடிகராக இருந்து அவர் என்ட்ரி கொடுத்துள்ளார். ஒவ்வொரு படத்துக்கும் ரூ.150 கோடி முதல் ரூ. 200 கோடி வரை அவர் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு வேட்பாளர்களின் வேட்புமனுவையும் டவுன்லோட் செய்து அவர்களின் சொத்து உள்பட பிற தனிப்பட்ட விஷயங்களை பார்க்க எப்போதும் மக்கள் அதிகம் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் விஜயின் வேட்புமனுவை அதிகமானவர்கள் டவுன்லோட் செய்து பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதில் அவர் பின்தங்கிவிட்டார். சீமானின் வேட்புமனு தான் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. சீமான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது வேட்புமனு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தி்ல கடந்த 30ம் தேதி அப்டேட் செய்யப்பட்டது. இதில் தற்போது வரை 23 லட்சத்த13 ஆயிரத்து 114 முறை டவுன்லோட் செய்துள்ளனர். அதேவேளையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என்று 2 தொகுதிகளில் விஜய் போட்டியிட்டாலும் கூட அவரது வேட்புமனுவை சுமார் மூன்றரை லட்சம் பேர் வரை மட்டுமே டவுன்லோட் செய்யப்பட்டுள்ளனர்.

விஜயை வீழ்த்திய சீமான்

இதன்மூலம் விஜயை, சீமான் வீழ்த்தி உள்ளார். இதன்மூலம் விஜயை விட சீமானின் குடும்பம், சொத்து உள்ளிட்ட பின்னணி விவரங்களை அறியவே மக்கள் அதிகம் ஆர்வம் காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் சீமானை கணக்கிலேயே எடுக்காமல் இருந்த விஜய் அவரிடம் வீழ்ந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+