பேனா தொலைஞ்சு போச்சு! போலீஸில் புகாரளித்த விஜய் வசந்த் எம்பி! ஆமா அந்த பேனா விலை எம்புட்டு தெரியுமா?
சென்னை: தனது பேனா தொலைந்து போனது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்.
காவல்துறையினரிடம் புகார் அளிக்கும் அளவுக்கு அப்படி என்ன பெரிய பேனா அது என இதை படிக்கும் பலரும் முணுமுணுக்கலாம்.
விஜய் வசந்த் தொலைத்த பேனாவின் மதிப்பு ஐநூறு ரூபாயோ, ஆயிரம் ரூபாயோ இல்லை, சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புடைய மோண்ட் பிளாங்க் (Mont Blanc) பேனாவை தான் அவர் தொலைத்திருக்கிறார்.

ஜெர்மன் பேனா
ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்படும் நூற்றாண்டு பாரம்பரியமிக்க மோண்ட் பிளாங்க் (Mont Blanc) பேனாவானது, உலகின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பயன்படுத்தும் பேனாவாக திகழ்கிறது. மோண்ட் பிளாங்க் பேனாவை பொறுத்தவரை பெருமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் இந்த வகை பேனாக்கள் இவ்வளவு காஸ்ட்லியாக உள்ளன. நடிகர் கமல்ஹாசன் கூட இந்த பேனாவை தான் விரும்பி பயன்படுத்துவார் எனக் கூறப்படுகிறது.

நட்சத்திர விடுதி
சரி விஷயத்திற்கு வருவோம், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார். அப்போது தனது சட்டை பாக்கெட்டில் இருந்த மோண்ட் பிளாங்க் (Mont Blanc) பேனா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். விஜய் வசந்த் எம்.பி. தொலைத்த பேனாவின் மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாய் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேனாவுக்கு இன்ஸ்யூரன்ஸ்
இந்தளவுக்கு விலை உயர்ந்த பேனா என்பதால், அந்த பேனா நிறுவனமே இன்ஸ்யூரன்சும் போட்டுக் கொடுத்திருக்கிறது. இந்த இன்ஸ்யூரன்ஸை கிளைம் செய்ய வேண்டுமானால் காவல்துறையினரிடம் புகாரளித்து அதன் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை அவசியமாகிறது. இதனால் தான் தனது பேனா தொலைந்து போனது பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார் விஜய்வசந்த் எம்.பி.

சிசிடிவி கேமரா
இதனிடையே பேனா காணாமல் போன நட்சத்திர விடுதியின் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டும் பேனா தொலைந்து போனது பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. மோண்ட் பிளாங்க் (Mont Blanc) பேனாவை நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு தான் விஜய் வசந்த் எம்.பி. பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications