பிரச்சார வாகனத்தில் இருந்து திடீரென சைக்கிளுக்கு தாவிய விஜய்.. காரைக்குடியில் சூழ்ந்த தவெகவினர்!
சிவகங்கை: காரைக்குடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்துள்ள விஜய், திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி சைக்கிளில் பயணித்து வருகிறார். தவெக தொண்டர்களின் கூட்ட நெரிசல் காரணமாக சைக்கிளும் ஓட்ட முடியாமல் தடுமாறி செல்லும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் அந்தப் பகுதியே பரபரப்புடன் காணப்படுகிறது.
தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்காக காரைக்குடிக்கு வந்துள்ளார். காரைக்குடியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 வேட்பாளர்களுக்கும் ஆதரவாக விஜய் வாக்கு சேகரிக்கிறார். இதற்காக காலையிலேயே சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக மதுரை வந்த விஜய், அங்கிருந்து பிரச்சாரம் வாகனம் மூலமாக காரைக்குடிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆனால் எதிர்பாராத வகையில் மதுரையில் இருந்தே விஜய்யை வரவேற்க தவெகவினர் பலரும் திரண்டனர். இதனால் சுமார் 100 கிமீ தொலைவை விஜய் சுமார் 4 மணி நேரமாக கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோல் பிரச்சார வாகனத்தின் மேல் நின்று மக்களுக்கு வணக்கம் கூறியபடியே விஜய் பயணித்தார். விஜய் வாகனத்தின் முன்பும், பின்பும் அதிகளவில் தொண்டர்கள் திரண்டனர்.
ஒரு கட்டத்தில் பிரச்சார வாகனம் ஆமை வேகத்தில் பயணிக்க வேண்டிய சூழல் உருவாகியது. அப்போது திடீரென விஜய்க்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சைக்கிள் ஒன்றில் ஏறி பயணிக்க தொடங்கினார். அப்போது தவெக தொண்டர்கள் பலரும் விஜய்யை சூழ்ந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் சைக்கிளையும் ஓட்ட முடியாமல் விஜய் தடுமாறினார்.
இதனால் காரைக்குடி பகுதியே பரபரப்பாகியது. முன்னதாக 2021 சட்டசபைத் தேர்தலின் போது விஜய் வாக்கு செலுத்த சென்ற போது சைக்கிளில் பயணம் மேற்கொண்டார். தற்போது 2026 சட்டசபைத் தேர்தலில் வாக்கு சேகரிக்க வரும் போது சைக்கிளில் பயணித்திருக்கிறார். இதையடுத்து விஜய் சைக்கிள் ஓட்டும் வீடியோவும், சைக்கிள் ஓட்ட முடியாமல் தடுமாறிய வீடியோவும் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
தொடர்ந்து மீண்டும் பிரச்சார வாகனத்தில் ஏறிய விஜய், காரைக்குடிக்கு வந்து சேர்ந்தார். விஜய்க்கு பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக விஜய் காரைக்குடியில் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது தவெக தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக












Click it and Unblock the Notifications