வேண்டாத வேலை பாத்த விஜய்.. களத்தில் இல்லாத கட்சியா? அடித்து துவைக்கும் அதிமுகவினர்! திமுகவுக்கு லக்!
சென்னை: திமுக எதிர்ப்பு என்ற பிரதான ஆயுதத்துடன் தமிழக அரசியலில் களம் கண்டிருக்கிறார் விஜய். அதே நேரத்தில் 'களத்தில் இல்லாதவர்கள்' என நாம் தமிழர் கட்சியை குறிப்பிடுவதாக சொன்னாலும் விஜய் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர் அதிமுகவினர். 50 ஆண்டுகளை கடந்த இயக்கத்தை விஜய் புறம் தள்ளி பேசுவதோடு எம்ஜிஆர், ஜெயலலிதா அடையாளங்களை பறிக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடாகி வரும் நிலையில் ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலையை துவக்கி விட்டன. நடிகர் விஜயும் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கடந்த 18ஆம் தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார் செங்கோட்டையன். அதில் பேசிய விஜய் திமுக வழக்கம் போல திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார். அதே நேரத்தில் பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குறித்து பேசவில்லை.

விஜய் அரசியல்
அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் களத்தில் இல்லாத கட்சிகளை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என சொன்னார் விஜய். கட்சி ஆரம்பித்ததில் இருந்து, விஜயை நாம் தமிழர் கட்சி விஜய் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அந்த கட்சியை குறிப்பிட்டு பேசியதாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் திமுக -தவெக இடையேதான் போட்டி என்ற பேச்சின் மூலம் அதிமுகவை புறந்தள்ளிவிட்டு அந்த இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்ள பார்க்கிறார் விஜய் என கூருகின்றனர் அதிமுகவினர்.
அதிமுக எதிர்ப்பு
மேலும் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா என அதிமுகவின் தலைவர்களை தவெகவுக்கு அடையாளமாக பயன்படுத்தி தமிழக அரசியலில் திமுகவுக்கு மாற்று தவெகதான் என முன்னிறுத்த முயல்கிறார் விஜய் எனக் கூறும் அதிமுகவினர் தற்போது அவரை வசைபாட தொடங்கி இருக்கின்றனர். அதிமுக, கட்சி பலமாக இல்லை, பிளவுபட்டுள்ளது என சொல்லப்பட்ட நிலையிலும், 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக 23.5 சதவீத வாக்குகளை தக்கவைத்துக் கொண்டது. இந்த வாக்கு வங்கி எந்த ஒரு தனிநபரின் பிரச்சாரத்தாலும் உருவானது அல்ல.
எம்ஜிஆர் - ஜெயலலிதா
எம்ஜிஆர் - ஜெயலலிதா என்ற அரசியல் முகவரியும், இரட்டை இலை என்ற அடையாளமும் இணைந்து இருந்ததால்தான் அந்த ஆதரவு தொடர்கிறது என்பதே பொதுவான கணிப்பு. ஜெயலலிதா, எம்ஜிஆர் பெயர்களை மேடைகளில் உச்சரிப்பதாலும், அவர்களது படங்களை சட்டைப் பையில் வைத்துக் கொள்வதாலும் மட்டுமே அதிமுக தொண்டர்களை தங்கள் பக்கம் இழுத்துவிட முடியும் என்று யாரும் நினைக்க வேண்டாம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
விஜய் அதிமுக மோதல்
அண்ணாவும் எம்ஜிஆரும் காலகட்ட மாற்றத்தை உருவாக்கியவர்கள். அந்த வரிசையில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்று கூறும் விஜய், மேடைகளிலும் பதாகைகளிலும் எம்ஜிஆர் படத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். ஆனால், "எம்ஜிஆர் படம் காட்டியவுடன் பின்னால் வந்து விடும் கூட்டம் அதிமுக தொண்டர்கள் அல்ல" என்பதே அக்கட்சியின் உறுதியான நிலைப்பாடு. இதற்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராக இருந்த சசிகலாவையும், இரண்டு முறை முதல்வராக அமர்த்தப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தையும் அதிமுக தொண்டர்கள் நிராகரித்தனர்.
திமுக
இப்படிப்பட்ட சூழலில், கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட கட்சியை "களத்திலேயே இல்லாத கட்சி" என்ற தொனியில் விஜய் பேசியது, அதிமுக முகாமில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சு தொடர்ந்தால், அதிமுகவும் இனி அமைதியாக இருக்காது. விஜய்க்கு எதிராக நேரடியான அரசியல் தாக்குதல்கள் தொடங்கும். அதே நேரத்தில், தவெக தரப்பும் அதிமுகவை விமர்சிக்கலாம், இது திமுகவுக்கு தான் கூடுதல் பலம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே












Click it and Unblock the Notifications