இன்னும் 3 மாநாடு நடத்தினால் போதும்.. விஜய் காலி பெருங்காய டப்பாவாகிவிடுவார்.. அட்டாக் மோடில் திமுக
சென்னை: விஜய் இன்னும் 2 அல்லது 3 மாநாடுகளை நடத்தினாலே, காலி பெருங்காய டப்பாவாக மாறிவிடுவார் என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் விஜயின் உயரம் அவ்வளவுதான் என்று கூறிய சேகர்பாபு, ராஜா வேஷம் கலைந்து போய்விட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
மதுரையில் நடந்த தவெக 2வது மாநில மாநாடு தவெகவுக்கு வெற்றிகரமாக அமைந்தாலும், பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தவெகவில் 2ஆம் கட்டத் தலைவர்கள் இல்லாததை விஜய்யே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டு சென்றார். 234 தொகுதிகளிலும் தனது முகத்திற்காக வாக்கு போட வேண்டும் என்று கேட்ட விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

ஆனால் தூய்மைப் பணியாளர்கள் விவகாரம், தேசிய அளவிலான தேர்தல் ஆணையம் மீதான குற்றச்சாட்டு, ஆணவக் கொலைக்கு எதிரான தனிச்சட்டம் உள்ளிட்ட எந்தவித பிரச்சனைகளையும் விஜய் பேசவில்லை. வழக்கம் போல் வாரிசு அரசியல், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்டவை குறித்து மட்டுமே பேசினார். அதேபோல் முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்றும் அழைத்து சர்ச்சையில் சிக்கினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுவரை 2 மாநாடு முடித்துள்ளார். இப்போதே நரியின் சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும் டும்.. ராஜா வேஷம் கலைந்து போச்சு டும் டும் டும் டும் என்பதை போல் அனைத்து தரப்பு விமர்சனங்களையும் தாங்கி சென்றுள்ளார்.
இன்று அனைவரும் விமர்சனம் வைக்கும் அளவிற்கும் விஜய் தள்ளி வைக்கப்பட்டுள்ளார். விஜய் இன்னும் 2, 3 மாநாடு நடத்தினால் காலி பெருங்காய டப்பாவாகிவிடுவார். ஸ்டாலினை அங்கிள் என்று அழைத்ததன் மூலமாக, அவரின் உயரம் அவ்வளவு தான் என்று தெரியப்படுத்திவிட்டார். திராவிட மாடல் அரசு மத்திய அரசுக்கு மட்டுமல்லாமல் உலகத்திற்காது.
அதனால் விஜயின் சிறுபிள்ளைத்தனமாக பேச்சிற்கு எல்லாம் பதில் சொல்லி எங்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. 2026ஆம் ஆண்டு களத்தில் நோக்கி திமுக சென்று கொண்டுள்ளது. இப்படி சிறுபிள்ளைத்தனமாக பேசுபவரை களத்தில் சந்திப்போம். 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். அந்த வெற்றியை முதல்வர் ஸ்டாலினின் கரங்களில் ஒப்படைப்போம் என்று தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications