விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்!
சென்னை: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் களமிறங்கியிருக்கிறார். அவரை எதிர்த்து, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திலகபாமா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விஜய் போட்டியிடுவதால் பெரம்பூர் ஸ்டார் தொகுதியாக மாறியிருக்கிறது. இந்நிலையில் திலகபாமா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த தொகுதி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

பாமகவின் நிலைமை
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை மிக குறைவுதான். குறிப்பாக கடந்த 33 ஆண்டுகளில் 20 தொகுதிகளுக்கும் கீழ் பாமக போட்டியிடுவது இதுவே முதல்முறை. இப்படி இருக்கையில் தற்போது அன்புமணி, கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்.
பெரம்பூரில் திலகபாமா
இதில் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பாமகவின் பொருளாளர் திலகபாமா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "யாரையும் எதிர்த்து போட்டியிட இங்கு வரவில்லை. மக்களுக்காக பணி செய்ய வந்திருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கட்சியின் முன்னணி நிர்வாகி என்பதன் அடிப்படையில் தற்போது பெரம்பூரில் களமிறக்கப்பட்டிருக்கிறார்.
விஜய் vs என்டிஏ
விஜய்யை பொறுத்தவரை, தொடக்கத்தில் அதிமுக கூட்டணிக்குள் அவரை இழுத்துவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டியிருந்தார். எனவே விஜய்யை பெரிய அளவில் அதிமுக விமர்சிக்கவில்லை. ஆனால், கடைசியில் கூட்டணி கணக்கு பொய்த்து போனது. எனவே விஜய் மீது சரமாரியான விமர்சனங்களை அதிமுகவினர் அடுக்க தொடங்கினர். தவெகவை தோற்கடிக்க வேண்டும் என்று உறுதியாக சொல்லி வந்தனர்.
எடப்பாடியின் நகர்வு
ஆனால், தொகுதி பங்கீடு என்று வருந்த போது, பெரம்பூரில் விஜய் போட்டியிடுவார் என்று தெரிந்து.. நைஸாக அந்த தொகுதியை கூட்டணி தலையில் கட்டிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், திமுக இதில் உறுதியாக இருந்தது. பெரம்பூரை சிபிஎம் கேட்டபோது, அதெல்லாம் முடியாது.. விஜய்யை எங்கள் சின்னத்தில்தான் தோற்கடிப்போம் என்று கூறி, பெரம்பூரில் திமுக போட்டியிடுவதாக அறிவித்தது.
விஜய் vs திலகபாமா
இப்படி இருக்கையில் அதிமுக கூட்டணியில் பெரம்பூர் தொகுதியை வாங்கிய பாமக தற்போது வேட்பாளரை அறிவித்திருக்கிறது. திலகபாமா தவெகவில் முக்கிய புள்ளிதான். ஆனால், விஜய்யை எதிர்கொண்டு தோற்கடிக்கும் அளவுக்கு முக்கிய புள்ளியா என்பது சந்தேகம்தான் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications