சர்க்கார் VS கழக தலைவன்! சினிமா பின்புல இருவர்.. முதல்வர் & எதிர்க்கட்சித் தலைவர்!
சென்னை: திமுக சட்டமன்ற குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளதால், இனி தமிழக சட்டமன்றத்தில் விஜய் vs உதயநிதி ஸ்டாலின் என களம் மாறியிருக்கிறது. இருவரும் சினிமா பின்புலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சர்க்கார் vs கழகத்தலைவன் என்றே களம் உருவாகியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் இன்று முதல் முற்றிலும் மாறுபட்ட சூழல் உருவாகியுள்ளது. அதாவது கடந்த தேர்தல் வரை ஸ்டாலின் vs எடப்பாடி பழனிசாமி என்றும், அதிமுக - திமுக என்று அரசியல் யுத்தம் நடைபெற்ற நிலையில், தவெகவின் வெற்றி, களத்தை முற்றிலும் மாற்றி, புரட்டி போட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
2026 தேர்தல் அரசியலில் புது அனுபவத்தை தந்துள்ளது. விஜய்யின் வருகையால் அதிமுக படுதோல்வியை சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சியாகவும், புது முகமாக களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆளும் கட்சியாகவும் மாறியுள்ளது.
ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளதால், முதல் முறையாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்படுகிறார். திமுக ஆலோசனை கூட்டத்தில் திமுக சட்டமன்ற குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக சட்டமன்ற குழு துணைத் தலைவராக கே.என்.நேரு, கொறடாவாக எ.வ.வேலு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சர்க்கார் vs கழகத்தலைவன்
இதனால், இனி தமிழக சட்டமன்றத்தில் விஜய் vs உதயநிதி ஸ்டாலின் என களம் மாறியிருக்கிறது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், இருவருமே சினிமா பின்புலத்தை சேர்ந்தவர்கள், உதயநிதி ஸ்டாலின் அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், அவர் நடிகராகவே முதலில் அறியப்பட்டார். அதன்பிறகே அரசியலில் எண்ட்ரி கொடுத்தார்.
விஜய்யை பற்றி சொல்லவே தேவையில்லை. அந்த வகையில் தற்போது சர்க்கார் vs கழகத்தலைவன் என்றே களம் உருவாகியுள்ளது. விஜய்யை பொறுத்தவரை நாளையை தீர்ப்பு முதல் ஜனநாயகன் வரை கிட்டத்தட்ட 30 வருடங்களாக சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தார். உதயநிதி ஸ்டாலின் கடந்த 2012 ஆம் ஆண்டு, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.
உதயநிதி நடித்த படங்கள்:
ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக என் மனசு தங்கம், இப்படை வெல்லும், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கலக தலைவன், கண்ணை நம்பாதே, மாமன்னன் என சுமார் 15 படங்களில் நடித்துள்ளர்.
உதயநிதி ஸ்டாலின் கடைசியாக 2023 ஆம் ஆண்டு வெளியான மாமன்னன் படத்தில் நடித்தார். அதன்பிறகு துணை முதல்வர் பொறுப்பு ஏற்றதால் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இனி தமிழக அரசியல் களம் சினிமா பின்புலத்தை சேர்ந்த இரு தலைவர்களை முன்னிறுத்தியே நகர இருக்கிறது.














Click it and Unblock the Notifications