பெரம்பூர் தொகுதி.. விஜய்யை எதிர்க்க தயாராகும் ஆளூர் ஷா நவாஸ்? சென்னையில் களமிறங்கும் விசிக!
சென்னை: தவெக தலைவர் விஜய் போட்டியிடுவதாக சொல்லப்படும் பெரம்பூர் தொகுதியில் விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் போட்டியிடக் கூடும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். சென்னையில் பெரம்பூர், ஆர்கே நகர் மற்றும் ராயபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஒன்றை விசிகவுக்கு கொடுக்க திமுக முன் வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று தெரிகிறது. விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பாக தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தீர்மானம் நிறைவேற்றி இருந்தார். சென்னை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக ஆதவ் அர்ஜுனா இருப்பதால், விஜய் அங்கு போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து பெரம்பூர் தொகுதியில் போட்டியிட விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, 4ல் வென்றது. அதில் ஆளூர் ஷா நவாஸ் நாகை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
ஆனால் இம்முறை திமுக கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இணைந்திருக்கின்றன. இதனால் கடந்த முறை கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் மாற்றப்படலாம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக விசிக போட்டியிட்ட நாகை மற்றும் திருப்போரூர் தொகுதிகளில் வேறு கட்சிகள் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது. நாகையில் திமுக நேரடியாக களமிறங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதற்கு பதிலாக தலைநகரில் ஒரு தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை முன் வந்துள்ளதாக தெரிகிறது. அதன்படி ராயபுரம், ஆர்கே நகர் மற்றும் பெரம்பூர் ஆகிய 3 தொகுதிகளில் ஒன்றை விசிகவுக்கு ஒதுக்க திமுக தலைமை முன் வந்திருக்கிறது. இந்த 3 தொகுதிகளில் சிறுபான்மை சமூக மக்கள் அதிகளவில் இருக்கின்றனர். விஜய் இங்கு போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுவதற்கு இதுவும் ஒரு வலுவான காரணம்.
கடந்த முறை ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் தோல்வி அடைய காரணமும் சிறுபான்மை சமூக வாக்குகள் தான். இதில் பெரம்பூர் அல்லது ராயபுரம் ஒதுக்கப்பட்டால் ஆளூர் ஷா நவாஸும், ஆர்கே நகர் தொகுதி அளிக்கப்பட்டால் விசிக வழக்கறிஞர் எழில் கரோலினும் போட்டியிடலாம் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டால் திமுக நேரடியாக களமிறங்கும் என்று சொல்லப்படுகிறது.
-
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
"அன்னைக்கு காரி துப்பினவங்க... இப்போ போட்டோ எடுக்க வர்றாங்க!" முதலமைச்சருக்காக வருத்தப்பட்ட பெப்சி விஜயன் -
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல்












Click it and Unblock the Notifications