என் வீட்டில் 3 மணி நேரம் காத்துக்கிடந்தார் விஜய்..நன்றி உணர்வே இல்லை! தாராபுரத்தில் விளாசிய எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று அதிமுகவை மற்றும் பலர் என விமர்சிக்கும் இந்த விஜய் தான், அன்று என் வீட்டில் 3 மணி நேரம் காத்துக்கிடந்தார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும், 3 மணி நேரம் உங்கள் புலம்பலை கேட்டு நீங்கள் கேட்டதை செய்து கொடுத்தேன். கேட்டதை செய்து கொடுத்தும் உங்களுக்கு நன்றி உணர்வு இல்லை. தவெக வேட்பாளர் சத்யபாமா அழுகிறார். அவரது நடிப்பில் விஜய்யே தோற்றுவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் பானுமதியை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி தளவாய்பட்டினத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தவெக ஆட்சி மற்றும் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:-

Edappadi Palaniswami Dharapuram Vijay by election by election 2026

இதுவரைக்கும் சொல்லாத ஒரு விஷயம்

தவெக ஆரம்பித்து மூன்று ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், அதிமுகவை மற்றும் பலர் என்று குறிப்பிடுகிறார். மற்றும் பலர் என்று சொல்கிறீர்களே.. நான் முதல்வராக இருந்த போது என் வீட்டிற்கு வந்து பட வெளியீட்டுக்காக எனது வீட்டில் மூன்று மணி நேரம் காத்துக்கொண்டு இருந்தீர்கள். இதே விஜய் என் வீட்டில் மூன்று மணி நேரம் அமர்ந்து ஒரு பிரச்சினையை சொன்னார்.

இதுவரைக்கு சொல்லாத ஒரு விஷயத்தை நான் இங்கே சொல்கிறேன். மற்றும் பலர் என சொல்கிறார் அல்லவா.. நான் முதல்வராக இருந்த போது என் வீட்டில் 3 மணி நேரம் விஜய் காத்துக்கிடந்தார். படம் ரிலீஸ் ஆக வேண்டும். மத்தியில் இருந்து அனுமதி கிடைக்க வேண்டும். அடுத்த நாள் ரிலீஸ் ஆக வேண்டியுள்ளது.

சத்யபாமா நடிப்பில் விஜய்யே தோற்றுவிட்டார்

அன்று ஞாயிற்றுக்கிழமை லீவு.. அதிகாரிகள் எல்லாம் விடுமுறை காரணமாக அலுவலகத்தில் இல்லை. நாங்கள் டிக்கெட்டை விற்றுவிட்டோம் என பதறினார். நீங்க போங்க நான் செய்து கொடுக்கிறேன் என்று சொல்லியும்.. நீங்கள் செய்து கொடுத்தால்தான் போவேன் என்று சொன்னார். உங்களுக்கு அந்த நன்றி உணர்வு உள்ளதா? தவெக வேட்பாளர் சத்யபாமா அழுகிறார். அவரது நடிப்பில் விஜய்யே தோற்றுவிட்டார்.

எம்எல்ஏவை திருடியவர்களை என்ன சொல்வார்கள்?

இது ஒரு திணிக்கப்பட்ட தேர்தல். ஒரு தொகுதியில் எம்எல்ஏ இறந்தால் தான் இடைத்தேர்தல் நடைபெறும். ஆனால், இந்த தேர்தல் தவெகவின் குதிரை பேரத்தால் வந்துள்ளது. நான் உங்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன். ஆளுங்கட்சியினர் செய்தது தர்மமா? நியாயமா? மக்களாகிய நீங்கள் தேர்ந்தெடுத்த எம்எல்ஏவை ராஜினாமா செய்ய வைத்து, அவர்கள் கட சியில் இணைய செய்து இப்போது போட்டியிடுகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சி அமைய தான் வாக்களித்தார்கள். அதனால் தான் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

எம்எல்ஏ ஆவது என்பது சாதாரண விஷயம் அல்ல. குறைந்தபட்சம் 7 ஆயிரம் பேராவது இரவு, பகலாக உழைக்க வேண்டும். எம்.எல்.ஏவை விலை பேசி வாங்கியது தான் தூய சக்தியா?. அதுதான் தீய சக்தி. நமது எம்எல்ஏவை திருடிவிட்டார்கள். ஆடு திருடியவர்களை ஆடு திருடன் என்பார்கள்.. மாடு திருடியவர்களை மாடு திருடன் என்பார்கள். எம்எல்ஏவை திருடியவர்களை என்ன சொல்வார்கள்?

நிர்வாக திறனற்ற அரசு

ஆளுங்கட்சிக்கு சென்றால்தான் அதிகம் நல்லது செய்ய முடியும் என சொல்கிறார். மூட்டை, மூட்டையாக அவரால் வாங்க முடியும் என்பதால் தான் அவர் அங்கு சென்றுள்ளார். துரோகத்துக்கு இந்த இடைத்தேர்தலில் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்.

விஜய் வந்து 2 நிமிடம் பேசினாலே வெற்றி பெற்று விடுவோம் என்று சொல்லி வந்தனர். ஆனால் இப்போது அவர் பிரசாரம் செய்துவிட்ட நிலையிலும், கிராமம், கிராமமாக, தெருத்தெருவாக, ஏன்.. வீடு, வீடாக சென்றால் கூட மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். அவர் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. உங்களது நடிப்பை திரைப்படங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். பச்சிளம் குழந்தைகளும், பாட்டிகளும் எனது சொந்தம் என்கிறார்.

ஆனால், கரூர் சம்பவத்தின் போது யாரையும் சந் திக்காமல் 72 நாட்கள் வீட்டுக்குள் முடங்கியதுதான் இவரது செயல்பாடு. இவரா? மக்களை காப்பாற்றுவார். தவெக சட்டம் -ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தினமும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. இது நிர்வாக திறனற்ற அரசாக உள்ளது. நாள்தோறும் மின்வெட்டு நடக்கிறது" என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+