சைக்கிளில் சென்று திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்.. நம்மை பற்றி பேசலாமா? எடப்பாடி பழனிசாமி நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவை பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது. சைக்கிளில் திமுகவின் அடையாளம் ஒட்டி வாக்குச்சாவடிக்கு போய் அந்த கட்சிக்கு வாக்களித்தவருக்கு நம்மை பற்றி பேச தகுதியுள்ளதா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மகளிர் உரிமைத்தொகயை உயர்த்தவில்லை. முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 3 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றார்கள். செய்தார்களா? விவசாயிகளின் கடன்களையும் சொன்னபடி செய்யவில்லை என எடப்பாடி குற்றம்சாட்டியுள்ளார்.

Vijay went on a bicycle and voted for DMK talk about us Edappadi Palaniswami slams

திமுகவுக்கு வாக்களித்தவர் விஜய்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாராபுரத்தில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- திமுகவின் கிளைதான் அதிமுக என்று சொல்கிறார் தவெக தலைவர். நாங்கள் கிளை இல்லை. நீங்கள்தான் கிளை. சைக்கிள் போய் ஓட்டு போட போனீர்கள் அல்லவா? கருப்பு சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு ஓட்டு போட்டவர் இன்று அதிமுக, திமுகவின் கிளை என்கிறார். அவர் கட்சி ஆரம்பித்தே மூன்று வருடம்தான் ஆகிறது. முளைச்சி மூன்று இலைதான் விட்டு இருக்கு..

அதற்குள் இத்தனை ஆர்ப்பாட்டம். அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 36 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட கட்சி. அதிமுகவை பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது. சைக்கிளில் திமுகவின் அடையாளம் ஒட்டி வாக்குச்சாவடிக்கு போய் அந்த கட்சிக்கு வாக்களித்தவருக்கு நம்மை பற்றி பேச தகுதியுள்ளதா?

அஞ்சலி செலுத்தாத தலைவர் விஜய்

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடலுக்கு கூட அஞ்சலி செலுத்தாத தலைவர் தவெக தலைவர் விஜய். அந்த கூட்டத்தில் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் எல்லாரும் ஆம்புலன்ஸ் மூலமாக சேர்க்கப்பட்டனர். அவர்களை கூட தவெகவினர் பார்க்கவில்லை. தவெகவை தவிர அனைத்து கட்சிகளும் அஞ்சலி செலுத்தியது. கரூர் சம்பவம் நடைபெற்ற உடனேயே அவசர அவசரமாக துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடோடி போய் பனையூருக்கு போனவர் 72 நாட்களாக வெளியில் வரவில்லை.

இப்படிப்பட்ட தலைவரா? நாட்டு மக்களுக்கு நன்மை செயய் போகிறார். அவரது பேச்சை கேட்க வந்தவர்களின் துக்கத்திற்கு கூட துக்கம் விசாரிக்காத தலைவர் ஒருவர் என்றால் அது தவெக தலைவர்தான். துக்கம் விசாரிப்பது என்றால் இறந்தவர் வீட்டிற்கு சென்று அங்குதான் துக்கம் விசாரிப்பது வழக்கம். ஆனால் தவெக தலைவர் புதுமையானவர். இறந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு அனுதாபம் கூறுகிறார். எவ்வளவு கேவலம் சிந்தித்து பாருங்கள்.

திணிக்கப்பட்ட தேர்தல்

ஒரு கட்சியில் இருந்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏவை ராஜினாமா செய்ய வைத்து தன்னுடைய கட்சியில் இணைத்து அவருக்கே அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கிறார் என்றால் அந்த கட்சியின் யோக்கியதை என்னவென்று பார்க்க வேண்டும். இதுவா தூய சக்தி?. இதுவா வெளிப்படையான கட்சி.. இந்த கட்சி தீய கட்சி. உண்மையாக நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் பாராட்ட வேண்டும்.

ஆனால் வேறு ஒரு கட்சியில் வெற்றி பெற்றுவிட்டு வந்தவரை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை காப்பற்றுவதற்காக வெட்கக்கேடான செயலில் ஈடுபட்ட தலைவர்தான் தவெக தலைவர். இதுவரை அரசியலில் வரலாற்றில் யாரும் இல்லை. தவெக ஆட்சி அமைக்க துணை நின்ற கம்யூனிஸ்ட் கட்சியே சொல்கிறது, இது திணிக்கப்பட்ட தேர்தல் என்று.

மகளிர் உரிமைத்தொகயை உயர்த்தவில்லை

இது தேவையற்ற தேர்தல்... அதுமட்டும் இல்லை. தவெகவை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகிறது. மீண்டும் ஒரு தேர்தல் வரக்கூடாது என்பதற்காக தவெகவை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எந்த தேர்தல் வாக்குறுதியையும் தவெக நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமைத்தொகயை உயர்த்தவில்லை. முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 3 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றார்கள். செய்தார்களா? விவசாயிகளின் கடன்களையும் சொன்னபடி செய்யவில்லை. எந்த அளவு விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள் என்று பாருங்கள்." என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+