கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா!
சென்னை: கொங்கு மண்டலத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில் தங்க உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். மற்ற மாவட்டங்களில் பிரச்சாரம் செய்யும் போது மட்டும் ஹோட்டல்களில் தங்கும் விஜய், செங்கோட்டையனின் வீட்டிற்கு மட்டும் ஸ்பெஷலாக செல்வதால் தவெக சீனியர்கள் மத்தியில் புலம்பல் தொடங்கியுள்ளதாக கூறுகின்றனர்.
சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், தவெக தரப்பில் தேர்தல் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே பெரம்பூர் தொகுதியில் போட்டியிட விஜய் வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட சூழலில், நாளை திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன்பின் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பிரச்சாரமும் மேற்கொள்ள இருக்கிறார். தொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி முதல் விஜய் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். தமிழ்நாட்டின் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் விஜய் பயணிக்க உள்ளார். இதனால் விஜய் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டல்களில் அறைகள் புக் செய்யப்பட்டுவிட்டது.
இதற்கான ஏற்பாடுகளை விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் செய்து கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே கொங்கு மண்டலத்திற்கு பிரச்சாரத்திற்கு வரும் போது விஜய் ஹோட்டலில் தங்காமல், தனது வீட்டில் தங்க வேண்டும் என்று செங்கோட்டையன் விஜய்யிடம் கேட்டிருக்கிறார். இதனால் உற்சாகம் அடைந்த விஜய், உடனடியாக ஓகே சொல்லியதாக தெரிகிறது.
குள்ளம்பாளையத்தில் செங்கோட்டையனுக்கு சொந்தமான வீட்டில் தான் விஜய் தங்கவிருக்கிறாராம். இதனால் செங்கோட்டையன் குஷியோ குஷியில் இருப்பதாக சொல்கிறார்கள். அதேபோல் செங்கோட்டையன் வீட்டில் விஜய் தங்குவது தவெகவின் மற்ற நிர்வாகிகளிடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஆதவ் அர்ஜுனா, விஜய் வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் செய்யவில்லையே என்று புலம்பி வருகிறாராம்.
கூட்ட நெரிசல் காரணமாக விஜய்யின் வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்ட சூழலில், எப்படியாவது வில்லிவாக்கத்திற்கு விஜய்யை அழைத்து வந்துவிட வேண்டும் என்பதில் ஆதவ் அர்ஜுனா குறியாக இருக்கிறார். இதனால் தவெகவில் சீனியர்கள் மத்தியில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது.
-
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்!












Click it and Unblock the Notifications