”முதல்வர் விஜய்” அதிரடி அறிவிப்பு! யாதும் அறியான் டிரெய்லரில் இடம் பெற்ற காட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் கோபி இயக்கத்தில் உருவாகியுள்ள யாதும் அறியான் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த டிரெய்லரில், 2026 ஆம் ஆண்டில் கதை நடக்கும் ஒரு காட்சியில், "தமிழகத்தில் இனி இலவசங்கள் கிடையாது - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு" என காட்சிப்படுத்தப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் மத்தியிலும் இந்த கிளிப் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நடக்கும் காட்சி ஒன்று டிரெய்லரில் இடம் பெற்ற காட்சி ஒன்றில் பெட்டிக்கடை ஒன்றில் நாளிதழ்களின் போஸ்டர் தொங்க விடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தமிழகத்தில் இனி இலவசங்கள் கிடையாது, இளைஞர்கள் - பெண்கள் - விவசாயிகளுக்கு புதிய திட்டத்தை முதல்வர் விஜய் அறிவிப்பு என்ற செய்தியை காட்சியாக இடம்பெற செய்துள்ளனர். இந்த காட்சிதான் தற்போது வைரல் ஆக பரவி வருகிறது.

vijay-will-be-the-chief-minister-in-2026-a-scene-from-the-yaadhum-ariyaan-trailer

கோபி இயக்கத்தில் தம்பி ராமையா, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் யாதும் அறியான். இந்த மாத இறுதியில் திரைக்கும் வரும் யாதும் அறியான் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த டிரெய்லரில் இடம் பெற்ற ஒரு காட்சி ஒன்று நேற்று முதலே சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டிரெய்லரில் இடம் பெற்ற காட்சி ஒன்றில் பெட்டிக்கடை ஒன்றில் நாளிதழ்களின் போஸ்டர் தொங்கவிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தமிழகத்தில் இனி இலவசங்கள் கிடையாது, இளைஞர்கள் - பெண்கள் - விவசாயிகளுக்கு புதிய திட்டத்தை முதல்வர் விஜய் அறிவிப்பு என்ற செய்தியை காட்சியாக இடம்பெற செய்துள்ளனர். இந்த காட்சிதான் தற்போது வைரல் ஆக பரவி வருகிறது.

2.11 நிமிடம் ஓடக்கூடிய அந்த டிரெய்லர் காட்சியில் 0.55வது நிமிடத்தில் கடை ஒன்றில் தினத்தந்தி மற்றும் செய்தி மலர் நாளிதழ்களின் போஸ்டர்கள் தொங்க விடப்பட்டுள்ளது. அதில், தங்கம் விலை கிடுகிடு உயர்வு, தமிழகத்தில் இனி இலவசங்கள் கிடையாது, இளைஞர்கள் - பெண்கள் - விவசாயிகளுக்கு புதிய திட்டங்கள்.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு என்று போடப்பட்டுள்ளது.

விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் மத்தியிலும் இந்த கிளிப் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் நேரடி அரசியலை தொடர்புப்படுத்தும் வகையில், காட்சிகள் இடம் பெற்று இருக்காது. சங்கேத குறியீடுகள் இருப்பதை பார்க்க முடியும். ஆனால், யாதும் அறியான் படத்தின் காட்சியில் நேரடியாகவே முதல்வர் விஜய் என்று குறிப்பிடப்பட்டு இருப்பது கவனம் பெற்று இருக்கிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விஜய்யின் தவெக முதல் முறையாக களம் காண்கிறது. பாஜக, திமுகவுடன் கூட்டணி கிடையாது என்று விஜய் அறிவித்து இருப்பதால் வரும் தேர்தலில் நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ளது. சீமான் ஏற்கனவே, தனித்துதான் போட்டி என்று அறிவித்து இருப்பதால், திமுக தலைமையிலான ஒரு அணி, அதிமுக- பாஜக அணி, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவும் எனத்தெரிகிறது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்க கூடிய நிலையில் தேர்தல் பரபரப்பு தற்போதே தொற்றிக்கொண்டுள்ளது. இத்தகைய அரசியல் பரபரப்புக்கு இடையே வெளியாக இருக்கும் யாதும் அறியான் படத்தில் விஜய் என்ற வாசகத்துடன் காட்சியானது இடம் பெற்று இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் இந்த காட்சிகள் அதிகம் பகிரப்பட்டும் விவாதத்திற்குள்ளும் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+