"விஜய் 2026 தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார்! ஆனால்...” ட்விஸ்ட் கொடுத்த அண்ணாமலை
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாஜக உட்கட்சிப் பூசல் புகார் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். அப்போது விஜய் அரசியல் தொடர்பாகச் சில கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், விஜய் நிச்சயம் 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசியலில் இப்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 2026க்கான கூட்டணி குறித்த கணக்குகள் இப்போதே மாறி வருகின்றன. குறிப்பாக அதிமுக பாஜக கூட்டணி அமைந்த பிறகு கூட்டணியில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார். கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ள ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுக்கு அவர் அழைப்பு விடுத்தார். மேலும், விஜய் அரசியல் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கும் அண்ணாமலை மிக விரிவான விளக்கத்தைக் கொடுத்தார்.
செய்தியாளர்களிடம் அண்ணாமலை மேலும் பேசுகையில், "2026ல் விஜய் எதாவது தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்றால் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஏனென்றால் புதியவர்களுக்கு எப்போதுமே வாய்ப்பைத் தரும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. மாற்றம் வேண்டும் என நினைக்கும் 10% மக்கள் எப்போதுமே புதியவர்களுக்கு வாக்களிக்கிறார்கள். மாற்றத்தை பற்றிப் பேசுவோருக்கு அனைவருக்கும் தமிழக மக்கள் மரியாதை தருவார்கள்.
ஆனால், இங்குக் கேள்வி யார் ஆட்சியை அமைப்பார்கள் என்பது தான். ஏனென்றால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா இல்லை என்பது வேறு.. யார் ஆட்சியைப் பிடிக்கிறார்கள் என்பது வேறு! இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. விஜய்யை பொறுத்தவரை அவர் பெரிய நடிகர். அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சினிமாவில் உச்சத்தில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளதாக அவரே சொல்கிறார்.
அவர் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்றால் நிச்சயம் ஏற்படுத்துவார். அதேநேரம் எங்களுடைய பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சியை அமைக்கும் அதுவே எனது நம்பிக்கை" என்று அவர் தெரிவித்தார்.
-
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்










Click it and Unblock the Notifications