விஜய் ரசிகர்களே எனக்குதான் வாக்களிப்பாங்க.. விஜயால் ஒரு சிக்கலும் இல்லை! சீமான் முக்கிய ஸ்டேட்மென்ட்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தாலும்.. நடிகர் விஜயின் அரசியல் வருகையாலும் எனது வாக்குகள் குறையாது என்று தேனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் திமுக பற்றி விஜய் மறைமுகமாக பேசுகையில்.. யார் அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் கலர் பூசுகிறார்கள். நீ பாஸிசம்.. நீ அது.. நீ இது என்று கலர் அடிக்கிறார்கள். எனக்கு கலர் அடிக்க முடியாது. சொல்லிவிட்டேன். அவர்கள் பாசிசம் பேசுகிறார்கள் என்றால்.. நீங்கள் என்ன பேசுகிறீர்கள். நீங்கள் என்ன பாயாசமா பேசுகிறீர்கள்.

மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாத்துறீங்க. திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு ஒரு குடும்ப சுய நலக்கூட்டம் தான் எங்களின் அரசியல் எதிரி. அரசியல் எதிரி மட்டும்தான் எங்களுக்கு. ஆபாசம், அள்ளு சில்லு எல்லாம் வச்சு அவதூறு பரப்பி இந்த படையை . வீழ்த்தலாம்னு கனவுல கூட நினைச்சுறாதிங்க. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். இந்த கலர் அந்த கலர் என்று பூசும் இந்த மோடி மஸ்தான் வேலையை இங்கு எடுபடாது. இறங்கியாச்சு, என்று கூறினார், என்று கூறினார்.
எதிர்ப்பு: விஜயின் பேச்சு காரணமாக அவர் எங்கே அதிமுக, நாம் தமிழர் வாக்குகளுக்கு குறி வைக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக இங்கேயும்.. பாஜக மத்தியிலும் ஆட்சியிலும் உள்ளது. இவர்களை மட்டுமே எதிர்க்கலாம் என்று விஜய் நினைக்கலாம். அதிமுக - எடப்பாடி இப்போது ஆக்டிவாக பெரிதாக அரசியல் செய்வது இல்லை. வரிசையாக 11 தேர்தல்களில் அந்த கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதனால் அவர்களை தவிர்த்து இருக்கலாம்.
அதேபோல் திமுகவை எதிர்ப்பதன் மூலம்.. மூவேந்தர்கள் படத்தை பயன்படுவதன் மூலம் விஜய் நாம் தமிழர் வாக்குகளையும் குறி வைக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக, நாம் தமிழரின் இடத்தை நிரப்பி.. திமுகவிற்கு எதிராக 2ம் இடத்தை பிடிக்க விஜய் நினைக்கலாம் என்று அரசியல் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
சீமான்: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தாலும்.. நடிகர் விஜயின் அரசியல் வருகையாலும் எனது வாக்குகள் குறையாது என்று தேனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும் போது ரசிகர்களை சந்தித்துதான் வந்தனர். ஆனால், திரைத்துறையில் இருந்து வந்த நான், மக்களை சந்தித்துதான் அரசியலுக்கு வந்தேன். ஒரு நடிகரைப் பார்க்க கூட்டம் அதிகளவு வரும். ஆனால், கூட்டத்தில் வந்தவர்களின் வாக்குகள் எல்லாம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே
விஜயின் வருகையால் எனது வாக்குகள் குறையாது. விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள், என்று சீமான் தெரிவித்துள்ளார். முன்னதாக மாற்று அரசியல் மாற்று சக்தி இந்த மாதிரி ஏமாத்துற வேலையெல்லாம் செய்ய மாட்டோம்.. அரசியல் மேடை என்றாலே கொந்தளிப்பாக பேசுவது, உலக வரலாறு, கோட்ஸ்களை எம்பி 3 ஆடியோ போல பேசுவது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாக விமர்சித்துள்ளார் நடிகர் விஜய்.












Click it and Unblock the Notifications