திமுக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடரும்! சட்டசபையில் திட்டவட்டமாக சொன்ன முதல்வர் விஜய்
சென்னை: விஜய் மீதான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடந்தது. அதில் வாக்கெடுப்பிற்கு முன்பு பல்வேறு அரசியல் தலைவர்களும் உரையாற்றினர். அப்போது தவெகவுக்கு ஆதரவு தரும் கூட்டணிக் கட்சிகளே, முந்தைய அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய், அனைத்து நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், இன்று சட்டமன்றத்தில் தனது மெஜாரிட்டியை நிரூபித்துள்ளார். ஆளுநர் இன்று மே 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. முதல்வர் விஜய் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பைக் கொண்டு வந்தார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது பல்வேறு கட்சித் தலைவர்களும் பேசினர். அப்போது விஜய் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்துள்ள கூட்டணிக் கட்சிகளே முந்தைய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நான் முதல்வர், புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்கள் தொடர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் இறுதியில் பேசிய முதல்வர் விஜய், இது தொடர்பாகவும் பேசியிருந்தார். முந்தைய திமுக அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் அனைத்தும் தொடரும் என்பதை விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், மதச்சார்பற்ற அரசாகவே தவெக அரசு தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications