மகிழ்ச்சியா இருக்கு நண்பா.. ரசிகர்களுக்கு கைப்பட கடிதம் எழுதிய நடிகர் விஜய்! லெட்டரை பார்த்தீங்களா?
சென்னை: தனது பிறந்தநாளுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நடிகர் விஜய் சினிமாவில் மட்டுமல்லாது நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது அரசியல் ரீதியிலான கருத்துகளை தெரிவித்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் செய்து வருகிறார்.

சமீபத்தில் மாநில அளவில் 10, +2 வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு தனது கையால் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார். இதுதவிர கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தனது பிறந்தநாளையொட்டி, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தனது ரசிகர்களுக்கு விஜய் தனது கைப்பட கடிதம் எழுதியுள்ளார். தனது பிறந்தநாளில் 4 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஈசிஆர் சரவணன் மற்றும் நிர்வாகிகளுக்கு தனது கைப்பட கடிதம் எழுதி பாராட்டியுள்ளார் விஜய்.

அந்த கடிதத்தில், "கடந்த ஜூன் 22 அன்று எனது பிறந்தநாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக நீங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்தேன். உங்களது இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன், நன்றி. - பிரியமுடன் விஜய்" என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
விஜய், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு கைப்பட எழுதிய இந்தக் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. ரசிகரின் செயல்பாட்டை மனம் திறந்து பாராட்டி ஊக்கப்படுத்திய விஜய்க்கு பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
-
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக்











Click it and Unblock the Notifications