Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“எங்களையும் கூப்பிடுங்க.. தவெக-வை புறக்கணிக்காதீங்க”.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: SIR - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் தவெக தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அந்தக் கூட்டங்களுக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பிரச்சாரம் என தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.

Vijay election commission sir

அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சிகளான தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் கூட்டணியை உறுதிப்படுத்தவில்லை. வரும் ஜனவரி மாதத்திற்குள் கூட்டணிகள் இறுதி வடிவம் பெறும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தவெக கூட்டணி எப்படி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.

இதற்கிடையே, சட்டசபைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் SIR பணிகளிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், SIR - மற்றும் சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் தவெக தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அந்தக் கூட்டங்களுக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும் தமிழக வெற்றி கழகத்தையும் கட்டாயம் அழைக்க வேண்டும். மற்ற அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை தமிழக வெற்றி கழகத்திற்கும் இந்தியத் தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும் அளிக்க வேண்டும் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தவெக கட்சி தலைவர் விஜய் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு:

1. தமிழக வெற்றிக் கழகம் ("TVK") சார்பாக உங்கள் அவசர தலையீட்டைக் கோரி கடிதம் எழுதுகிறேன். தவெக தமிழ்நாடு முழுவதும் ஒரு வெளிப்படையான இருப்பை நிறுவியுள்ளது. மேலும் வரவிருக்கும் தேர்தல்களிலிலும் போட்டியிடவுள்ளது. இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்ற பார்வையின்றி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுதல் அரசியலமைப்பின் அடிப்படை வடிவமைப்பின் ஒரு அங்கமாக அமைவதாக வலியுறுத்துகிறோம்.

2. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவிப்புகளில் நாங்கள் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பதில் இருந்து TVK விலக்கப்படுகிறது. இது பங்கேற்பில் சமத்துவத்தை குறைக்கிறது.

3. மாநிலத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம் கூட்டும் ஆலோசனைக் கூட்டங்களில் தவெக சேர்க்கப்படாதது, தேர்தல் செயல்முறைகளின் கண்காணிப்பில் ஒரு முக்கியமான வாக்காளர் பகுதியை பங்கேற்பிலிருந்து விலக்குகின்ற விளைவுகளை உருவாக்குகிறது.

4. வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய செயல்முறைகளின் உயர்ந்த தரத்தைக் காக்கும் நோக்கத்தில், எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து கூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைப்பு நிகழ்வுகளில் தவெகவிற்கு தக்க அறிவிப்பு வழங்கி, அவற்றில் பங்கேற்க அழைக்க வேண்டுமென தாழ்மையுடன் கோருகிறோம். நியாயமான தேர்தல் செயல்முறையை உறுதி செய்வதில் தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளுக்கு தவெக அதன் முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளது.

5. எனவே, இந்த தேர்தல் முறையை மேம்படுத்தும் பொது நோக்கில் எவருக்கும் பாதகமில்லாத இந்த நியாயமான கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்கும்படி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 324 இன் கீழ் உங்களது மேற்பார்வை அதிகாரங்களின் கீழ், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு அரசு ஆகியோருக்கு பொருத்தமான வழிமுறைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் வரவிருக்கும் தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் கூட்டப்படும் அனைத்து ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்களிலும் தவெக முறையாக சேர்க்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கிறோம் என்று வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+