ஐஸ்வர்யா வீட்டிலாவது சாவி டைப் லாக்கர்.. விஜய் யேசுதாஸ் வீட்டில் என்ன டைப் லாக்கர்? பகீர் திருட்டு
சென்னை: விஜய் யேசுதாஸ் வீட்டு நகைகள் பாஸ்வேர்டு போட்ட லாக்கரில் இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகிறார்கள்.
பாடகர் யேசுதாஸின் இளைய மகன் விஜய் யேசுதாஸ், பிராமபுரத்தில் மனைவி தர்ஷனா பாலா, மகன், மகளுடன் குடியிருந்து வருகிறார். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் பாடியுள்ளார்.
இவர் 2015 ஆம் ஆண்டு தனுஷின் மாரி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு காதலர்கள் தினத்தின் போது துபாயில் நடந்த இசைக் கச்சேரியில் தர்ஷனா பாலாவை சந்தித்தார். இருவரும் 5 ஆண்டுகள் காதலித்தனர்.

திருவனந்தபுரம்
இதையடுத்து இவர்களுக்கு 2007ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடந்தது. இவர்களுக்கு ஆமேயா, ஆவ்யன் ஆகிய மகள், மகன் உள்ளனர். விஜய் யேசுதாஸுக்கு சொந்தமாக சென்னை அபிராமபுரத்தில் 3ஆவது தெருவில் வீடு உள்ளது. இங்கு தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி தர்ஷனா பாலா நேற்று முன் தினம் ஒரு புகாரை கூறியுள்ளார்.

லாக்கரி வைத்த நகைகள்
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு டிசம்பரில் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகளைப் பார்த்தேன். பின்னர் கடந்த மாதம் நகைகளை எடுக்கச் சென்ற போது அவற்றைக் காணவில்லை. இதன் மதிப்பு ரூ 60 லட்சம் வரை இருக்கும். லாக்கரை திறந்த யாரோ திருடிச் சென்றுள்ளனர். எனவே எனது நகைகளை மீட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பாஸ்வேர்டு
பாஸ்வேர்டு போட்டு திறக்கும் அமைப்பைக் கொண்டது. எனவே வெளியிலிருந்து யாரும் கைவரிசை காட்டியிருக்க வாய்ப்பு இல்லை. நன்கு அறிமுகமான, நெருங்கிப் பழகிய அல்லது பாஸ்வேர்டு தெரிந்தவர்கள்தான் திருடியிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். வீட்டில் வேலை செய்த 3 பேர் மீதும் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

விசாரணை
அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்டமாக நகை திருட்டு தொடர்பாக துப்பு துலக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கை ரேகை நிபுணர்களும் விரைந்து சென்று தடயங்களை சேகரித்து வருகிறார்கள். விஜய் யேசுதாஸின் மகளும் மகனும் சென்னையில் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு விடுமுறையின் போதெல்லாம் விஜய் யேசுதாஸ் தனது குடும்பத்தினருடன் கேரளா சென்று விடுவார்.

ரஜினி மகள் வீட்டிலும் கைவரிசை
அது போன்று அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த திருட்டு நடந்திருக்கலாம் என தெரிகிறது. விஜய் யேசுதாஸ தற்போது ஒரு இசை நிகழ்ச்சிக்காக துபாய் சென்றுள்ளார். அவர் சென்னை வந்த பிறகு அவரது வெர்சனும் கேட்கப்படும் என தெரிகிறது. அண்மையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 200 பவுன் நகைகள் திருடு போயின. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு பிரபலம் வீட்டில் இது போன்று திருட்டு சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications