விஜய பிரபாகருக்கு தேமுதிக இளைஞர் அணி செயலாளர் பதவி.. பொருளாளர் ஆகும் எல்.கே.சுதீஷ்!
சென்னை: தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேமுதிக பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இது விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடைபெறும் தேமுதிகவின் முதல் பொதுக்குழு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தருமபுரி பாலக்கோடு வெள்ளிச்சந்தை கே.வி.மஹாலில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், இளைஞர் அணி செயலாளராக வி.விஜய பிரபாகர் இன்று (30.04.2025) முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு கட்சி நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவின் இளைஞர்அணி செயலாளராக இருந்து வந்த எல்.கே.சுதீஷ் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேமுதிக அவைத்தலைவர் வி.இளங்கோவன், தேமுதிக தலைமை நிலையச் செயலாளராக பார்த்தசாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இன்று பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தலைமை கழக நிர்வாகிகள்
பிரேமலதா விஜயகாந்த்- கழக பொதுச் செயலாளர்
டாக்டர் V.இளங்கோவன்- கழக அவைத்தலைவர்
எல்.கே.சுதீஷ், - கழக பொருளாளர்
தப.பார்த்தசாரதி- கழக தலைமை நிலையச் செயலாளர்
அழகாபுரம்.R.மோகன்ராஜ்- கழக கொள்கைப் பரப்பு செயலாளர்
எம்.ஆர்.பன்னீர்செல்வம் - கழக துணைச் செயலாளர்
SSS.U.சந்திரன்- கழக துணைச் செயலாளர்
S.செந்தில்குமார்- கழக துணைச் செயலாளர்
R.சுபா ரவி - கழக துணைச் செயலாளர்
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications