விஜயகாந்த் உடல்நிலை.. நான் அப்படி சொல்லவில்லை.. என் வீடியோவை திரும்பவும் பாருங்கள்.. விஜயபிரபாகரன்
சென்னை: கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை பரப்பி வருவதாக விஜய பிரபாகரன் கவலை தெரிவித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வாகும் அளவுக்கு திமுகவை பின்னுக்கு தள்ளி வாக்குகளை பெற்றார். ஆனால் அதன் பின்னர் வந்த தேர்தல்களில் எல்லாம் தேமுதிகவுக்கு தோல்வியே ஏற்பட்டது.

இந்த நிலையில் அவருடைய உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. அவரால் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாமலும் தேர்தல் கூட்டணி முடிவுகளை எடுக்க முடியாமலும் இருந்ததும் தேமுதிகவின் அதள பாதாள தோல்விக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
அவர் பழைய படி வரவேண்டும் என தேமுதிக தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் அவ்வப்போது பொது இடங்களில் தோன்றினால் கூட அவருடைய நிலையை பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் கேப்டனின் உடல்நிலை சற்று பின்னடைவுதான். ஆனால் அவர் நன்றாக இருக்கிறார். அவர் நூறு வயசு வரை நன்றாக இருப்பார். ஆனால் பழைய படி எழுந்து நடமாடுவாரா, பேசுவாரா என்றால் அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். கேப்டனின் தாரக மந்திரமே முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது என்பார்.
அதன் அடிப்படையில்தான் கட்சியை நடத்தி வருகிறோம். எங்கள் அம்மா பிரேமலதா , ரசிகர் மன்ற காலத்தில் இருந்தே கேப்டனுக்கு துணையாக இருந்துள்ளார். என் கனவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு தொண்டர்கள் அழைத்தார்கள் என்பதற்காகவே நான் வந்துள்ளேன். அதிமுக மாநாடு ஒன்றும் புதிதல்ல, ஏற்கெனவே அவர்கள் கட்சியில் நிறைய குழப்பம்.
அதனால் அவர்களுக்குள்ளேயே போட்டி போட்டுக் கொண்டு நடத்தும் ஒன்றாகவே பார்க்கிறேன். தேமுதிக மட்டுமில்லை பல கட்சியில் இருந்து பலர் கட்சி மாறி கொண்டு இருக்கிறார்கள். இதற்கு செந்தில் பாலாஜியும் ஒரு எடுத்துக்காட்டு. அதிமுக காலத்தில் செய்த தவறுக்காக திமுகவில் இருந்த போது சிறை சென்றுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாட்டை கேப்டன் உரிய நேரத்தில் முடிவெடுப்பார். இந்தியா முழுவதும் நீட் தேர்வு உள்ளது. இதை எந்த அரசியல்வாதியும் அரசியல் செய்யாமல் சரியான விஷயங்களை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். நம்மை விட பின் தங்கி உள்ள மாநிலத்தில் கூட இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழக்கிறார்கள் என கூறியிருந்தார்.
கேப்டன் உடல்நிலை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்... வழக்கம் போல் ஊடகங்கள் தவறான தலைப்பில் சித்தரிக்கிறது…இணைப்பை திறந்து நான் பேசியதை பாருங்கள் அப்போது புரியும் நன்றி!!
— Vijay Prabhakaran (@vj_1312) August 21, 2023
கட்சியினர் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்
வழக்கம் போல் ஆகஸ்ட் 25ஆம்… pic.twitter.com/xwE8IC9IQh
இந்த நிலையில் தனது பேட்டி குறித்து விஜய் பிரபாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கேப்டன் உடல்நிலை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்... வழக்கம் போல் ஊடகங்கள் தவறான தலைப்பில் சித்தரிக்கிறது... இணைப்பை திறந்து நான் பேசியதை பாருங்கள் அப்போது புரியும் நன்றி!!
கட்சியினர் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். வழக்கம் போல் ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாகக் கொண்டாடலாம் என தெரிவித்துள்ளார். அதாவது கேப்டனின் உடல்நிலை மோசம், பின்னடைவு என புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதால் தொண்டர்கள் மேலும் வேதனையில் உள்ளனர். இதனால் கேப்டனை பார்க்க வேண்டும் என பிரேமலதாவிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications