ஜனநாயகன் தியேட்டரில் விஜய பிரபாகரன் தேர்தல் தோல்வி வீடியோ! கொந்தளித்த தேமுதிக! எம்எல்ஏ விளக்கம்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகரில் ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டரில் விஜய பிரபாகரன் தோல்வி அடைந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டு தேமுதிகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து தவெக எம்எல்ஏ செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போது விஜயகாந்த் மறைந்த போது "இமயம் சரிந்தது" என அச்சிட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருந்தேன்.

Vijaya Prabhakaran

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட என்னை எதிர்த்து விருதுநகரில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் எங்களுக்கு எதிரி அல்ல. அவருக்கு வாக்கு செலுத்துவோர் செலுத்துங்கள். எனக்கு செலுத்துவோர் செலுத்தட்டும். யார் வெல்ல வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் என்று சொல்லியிருந்தேன்.

இப்போது நான் எம்எல்ஏவாக ஜெயித்துவிட்டேன். இப்போதும் நான் விஜய பிரபாகரன் விஷயத்தில் ஏற்கெனவே எடுத்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். அவர் எப்போதும் எங்களுக்கு அண்ணன்தான். இதை 11.04.2026 எனது பேஸ்புக் பக்கத்தில் போட்டிருக்கிறேன்.

தியேட்டரில் அந்த தோல்வி குறித்த வீடியோ ஒளிபரப்பானது எனது நிர்வாகிகள் செய்த வேலை, இது எனது கவனத்திற்கு வரவில்லை. எனக்கு தெரிந்திருந்தால் 100 சதவீதம் அதை தடுத்து நிறுத்தியிருப்பேன்.

அப்படி செய்தவர்கள் மீது நான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறேன். இது குறித்து இந்த மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் என்னை தொடர்பு கொண்டு கேட்ட போது கூட, "நான் இதை செய்யவில்லை, எனது நிர்வாகிகள் செய்துவிட்டார்கள், அதற்காக நான் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன்" என சொல்லியிருந்தேன்.

இது போதாக்குறைக்கு நான் மன வருத்தத்தை தெரிவித்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தேன். இந்த விவகாரத்தை சர்ச்சையாக்க வேண்டாம். மக்களுக்கு நல்லது செய்யதான் நான் வந்திருக்கிறேன். இவ்வாறு செல்வம் தெரிவித்திருந்தார்.

ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23 ஆம் தேதி வெளியானது. அதில் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் ஜனநாயகன் படம் வெளியான போது கடந்த தேர்தலில் விருதுநகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் தோல்வி அடைந்த வீடியோ கிளிப்பிங்க்ஸ் திரையிடப்பட்டது.

இது தேமுதிகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட தியேட்டரை முற்றுகையிட்ட தேமுதிகவினர் போராட்டம் நடத்தினர். மேலும் தவெக எம்எல்ஏ செல்வம் மன்னிப்பு கேட்ட வேண்டும் என போலீஸாரிடம் வாக்குவாதம் செய்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து விருதுநகர் எம்எல்ஏ செல்வம் வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம்.

ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் நாள் சிறப்புக் காட்சியையொட்டி விருதுநகரில் திரையிடப்பட்ட வாழ்த்து வீடியோவில் இடம்பெற்ற ஒரு காணொளி குறித்து சில தவறான புரிதல்கள் உருவாகியுள்ளன.

அந்தக் காணொளி என் கவனத்திற்கோ, அனுமதிக்கோ கொண்டுவரப்படாமல், என் மீது அன்பு கொண்ட சிலரால் வெளியிடப்பட்டதை அறிந்தேன். இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை எச்சரித்ததுடன், அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அண்ணன் விஜயபிரபாகரன் மற்றும், அவர் சார்ந்த கட்சிக்கு எதிரான எண்ணம், எங்களுக்கு எப்போதுமே கிடையாது என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+