தம்பி சண்முக பாண்டியனுக்கு சொகுசு காரை பரிசாக தந்த அண்ணன் விஜய பிரபாகரன்! விலை என்ன பாருங்க- அம்மாடி
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் இன்று பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு காஸ்ட்லி கார் ஒன்றை அவரது அண்ணன் விஜய் பிரபாகரன் பரிசாக அளித்துள்ளார்.
நடிகரும் விஜயகாந்த் தேமுதிகவை கடந்த 2005ம் ஆண்டில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பிரச்சினைகளால் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

இந்தச் சூழலில் தான் அவர் கடந்த ஆண்டில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த மிகப் பெரியளவில் மக்கல் திரளாக வந்தனர்.
கேப்டன் விஜயகாந்த்: அவரது உடல் இப்போது தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குத் தினசரி பல நூறு ரசிகர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கூட அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கேப்டன் என்று அவரது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது.
இதனால் விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்ற பிரேமலதா குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினர். மேலும், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.. இதற்கிடையே விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் இன்று தனது 31ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது.
சண்முக பாண்டியன்: சண்முக பாண்டியன் விருதுநகர் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர் பிரச்சாரத்தில் மிகத் தீவிரமாக இருக்கிறார். இதன் காரணமாக அவர் மிகவும் எளிமையான முறையிலேயே தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாள் முன்னிட்டு சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படைத் தலைவன் படத்தின் டீசரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிறந்த நாள் பரிசு: இதற்கிடையே தனது தம்பி சண்முக பாண்டியன் பிறந்தநாளுக்காக அவரது அண்ணன் விஜய் பிரபாகரன் போர்ஷ் (Porsche) கார் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார். இந்த காரின் விலை ரூ. 1.5 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அண்ணன் தம்பிக்கு வாங்கி கொடுத்த இந்த காஸ்ட்லி கிப்ட் தொடர்பான படங்கள் இணையத்தில் வேகமாகப் பரி வருகிறது. மேலும். விஜய பிரபாகரனுக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
விருதுநகர் லோக்சபா தொகுதி: இந்த லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அதிமுக தேமுதிக கூட்டணியில் இருந்து விஜய் பிரபாகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அங்கே திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூருக்கு மீண்டும் வாய்ப்ப தரப்பட்டுள்ளது. அதேபோல பாஜக சார்பில் அங்கே நடிகை ராதிகா களமிறங்குகிறார். இதனால் அங்கே பிரச்சாரம் இப்போதே சூடுபிடித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications