சில நாட்களில் வீடு திரும்பும் நடிகர் விஜயகாந்த்? மகன் விஜயபிரபாகரன் போட்ட உருக்கமான வீடியோ..
சென்னை: நடிகர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தான் விஜயகாந்த் இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம் என விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் உருக்கமான வீடியோ ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். அதன்பிறகு அரசியலில் நுழைந்தார். தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி எம்எல்ஏ ஆனார். அதோடு தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்தார்.

அதன்பிறகு அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து திரைத்துறை மற்றும் அரசியலில் இருந்து அவர் விலகி ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த மாதம் 18ம் தேதி திடீரென்று விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
விஜயகாந்த்துக்கு காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
அதில் விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்த போதிலும் அவரது உடல் நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விஜயகாந்த்துக்கு டாக்டர்கள் குழு மீண்டும் தீவிர சிகிச்சையை தொடங்கியது.
இதற்கிடையே தான் விஜயகாந்த் நலம்பெற அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதற்கிடையே விஜயகாந்துடன் எடுத்து கொண்ட போட்டோவை மனைவி பிரேமலதா வெளியிட்டார். அதன்பிறகு அவர் வெளியிட்ட வீடியோவில் ‛‛விஜயகாந்த் நலமாக இருக்கிறார். வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியிருந்தேன்.
ஆனால் டிரக்கியாஸ்டமி செய்யப்பட்டு இருப்பதாகவும் விஜயகாந்திற்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் முதல்வர் வந்து விஜயகாந்தை சந்தித்து எனக்கு ஆறுதல் கூறியது போலவும் தொடர்ந்து அனைத்தும் பொய்யான தகவல்களை யூடியூப் சேனல்களிலும் சேனல்களில் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் இது ஒட்டுமொத்தமாக தொண்டர்களையும் நிர்வாகிகளை, திரையுலகினரை எங்கள் குடும்பத்தினரை மிகப்பெரும் மன உளைச்சலுக்கு இந்த பொய் செய்திகள், வதந்தி செய்திகள் கொண்டு செல்கிறது.
நாங்கள் விஜயகாந்த் உடனேயே இருக்கிறோம். மருத்துவமனையில் எந்த வித பரபரப்பும் இன்றி அமைதியாக நல்ல படியாக விஜயகாந்த் இருக்கிறார். இந்த பரபரப்புகள் வதந்திகள் அனைத்துமே வெளியேதான் உலவிக்கொண்டு இருக்கிறது’’ என வதந்தி செய்திகள் குறித்த கவலையை பகிர்ந்து இருந்தார்.
இந்நிலையில் தான் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகர் விஜயகாந்த் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஒருவன் விஜயகாந்திடம்‛‛உன்னால முடியும்.. உன்னால முடியும்..’’ என உருக்கமாக கூற விஜயகாந்த் வீறுகொண்டு எழுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அதோடு அந்த வீடியோவின் கீழ்பகுதியில் விஜயகாந்த் தனது மனைவி, மகனோடு இருக்கும் போட்டோ இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பதிவில் விஜயபிரபாகரன், ‛‛கேப்டன் 100 சதவீதம் சிங்கமாக இருக்கிறார். கேப்டன் நன்றாக இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அவர் இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார். நாம் அனைவரும் தேமுதிகவாக கேப்டனுடன் இருப்போம்'' என தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications