விருதுநகர் லோக்சபா தொகுதியில் களமிறங்கும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.. விருப்பமனு விறுவிறு
சென்னை: விருதுநகர் லோக்சபா தொகுதியில் விஜயபிரபாகரன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் விருப்பமனு பெற்றுள்ளார். விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சிட்டிங் எம்.பி மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளராக விஜயபிரபாகரன் அறிமுக வேட்பாளராக களம் காண உள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் கூட்டணி ஒப்பந்தங்கள் மளமளவென கையெழுத்தாகி வருகின்றன. திமுகவும் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட நிலையில் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனிடையே விருதுநகர் லோக்சபா தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட வேண்டும் என்று தேமுதிக நிர்வாகிகள் விரும்பம் தெரிவித்திருந்தனர். திருமங்கலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் விருதுநகர் லோக்சபா தொகுதி வேட்பாளராக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாஜக அதிமுக என இரண்டு பெரிய கட்சிகளும் அழைப்பு விடுத்த நிலையில் அதிமுக உடன் கூட்டணி சேர்ந்துள்ளார் பிரேமலதா. இன்றைய தினம் தேமுதிக அலுவலகத்தில் விருப்பமனு பெறப்பட்டது.

லோக்சபா தேர்தலில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை விஜய பிரபாகரன் பெற்றுள்ளார்.
விருதுநகர் லோக்சபா தொகுதியில் தற்போது மாணிக்கம் தாகூர் காங்கிரசில் இருந்து எம்பியாக உள்ளார். இவர் கடந்த லோக்சபா தேர்தலில் 470,883 வாக்குகளை பெற்று வென்றார். இங்கே கடந்த முறை தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி அதிமுக - பாஜக கூட்டணியில் 316,329 வாக்குகளை பெற்றார்.
அதேபோல் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே சுதீஷ் விருப்ப மனு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .
அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவிற்கு திருவள்ளூர் மத்திய சென்னை விருதுநகர், கடலூர் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications