தஹில்ரமாணியின் ராஜினாமா ஏற்பு.. புதிய தலைமை நீதிபதியாக (பொறுப்பு) வினீத் கோத்தாரி நியமனம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி கே தஹில்ரமாணியின் ராஜினாமா ஏற்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தஹில் ரமாணி கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். மும்பையைச் சேர்ந்த தஹில் ரமாணி, மகாராஷ்டிர மாநில அரசு வழக்கறிஞராக இருந்தார்.
பின்னர் மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக 2017-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவரை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.

ராஜினாமா கடிதம்
இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தஹில் ரமாணி கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு கடந்த 6-ஆம் தேதி அனுப்பியிருந்தார்.

வழக்குகள்
இவரது ராஜினாமாவை ஏற்கக் கூடாது எனக் கோரியும் இவரை மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றக் கூடாது எனக் கோரியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஹில் ராஜினாமா கடிதம் கொடுத்ததை அடுத்து அவரது அமர்வில் பட்டியலிடப்பட்ட வழக்குகளை அவர் விசாரிக்கவில்லை.

அரசு பங்களா
கொலிஜியத்தின் பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது குடியரசு தலைவர் முடிவெடுக்கும் வரை வழக்குகளை விசாரிப்பதிலிருந்து தஹில் விலகியிருந்தார். இதனிடையே அரசு பங்களாவில் இருந்து தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

புதிய பொறுப்பு நீதிபதி நியமனம்
இந்த நிலையில் அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications